சோனியா தான் அடுத்த பிரதமர்: ஹர்கிசன் சிங்
டெல்லி:
அடுத்த பிரதமராக சோனியா காந்தி பதவியேற்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் அறிவித்தார்.
காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைக்க கூட்டணிக் கட்சிகளுடன் தீவிரமாக ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்சுர்ஜித்.
காங்கிரஸ் கூட்டணி 217 இடங்களில் வென்றுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் 62 இடங்களைப் பிடித்துள்ளன. இவைஇரண்டும் இணைந்து 279 எம்.பிக்களுடன் ஆட்சி அமைக்க முடியும் (ஆட்சி அமைக்க 272 எம்.பிக்கள் தேவை)
ஆனாலும் உத்தரப் பிரதேசத்தில் 34 இடங்களில் வென்றுள்ள முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சி, 20இடங்களைப் பிடித்துள்ள மாயாவதியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியோரையும் இணைத்து அதிக மெஜாரிட்டியுடன்நிலையான அரசை அமைக்க இடதுசாரிக் கட்சிகள் முயன்று வருகின்றன.
மாயாவதியின் ஆதரவு கிடைத்துவிட்ட சூழலில் முலாயம் சிங்குடன் மார்க்சிஸ்ட் தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்பேச்சு நடத்தி வருகிறார். ஆனால், தேர்தலில் பாஜகவை மறைமுகமாக ஆதரித்த முலாயமின் ஆதரவுஇல்லாமலேயே ஆட்சி அமைக்கலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.
ஆனால், இதை சுர்ஜித் ஏற்கவில்லை. அந்தக் கட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம் என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் முலாயம் சிங், அவரது வலதுகரமான அமர் சிங் மற்றும் தேசியவாதக் கட்சியின் தலைவர் சரத்பவாரும்ஆகியோர் சுர்ஜித்துடன் கூட்டாக ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கும் சுர்ஜித்தும் ஆலோசனை நடத்தினர்.
காலை முழுவதும் இந்த சந்திப்புகளை நடத்திய சுர்ஜித் பின்னர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது சோனியாகாந்தி தான் அடுத்த அரசுக்கு தலைமை வகிப்பார் என்றார்.
சோனியா தவிர வேறு யாருடைய பெயர் பரிசீலனையில் உள்ளது என நிருபர்கள் கேட்டபோது, எதற்காகஇன்னொரு பெயரையும் பரிசீலிக்க வேண்டும், பெரிய பெயர் பட்டியலே வெளியிட வேண்டும் என்றுநினைக்கிறீர்களா என்று பதில் தந்தார் சுர்ஜித்.
மேலும் ஆட்சியில் சமாஜ்வாடி கட்சியும் பங்கேற்கும் என்றார். அதே நேரத்தில் இடதுசாரிகளும் அமைச்சரவையில்பங்கேற்பார்களா என்ற கேள்விக்கு நேரடி பதில் தரவில்லை.
இதற்கிடையே முன்னாள் நிதியமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சிக்கான குறைந்தபட்சசெயல் திட்டத்தை வகுக்கும் வேலையை காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது.
காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரிகள் பங்கேற்றால் பொருளாதாரக் கொள்கைகள், தனியார்மயமாக்கல்விஷயத்தில் மோதல் எழும் என்பதால் அரசை நடத்துவது சோனியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications