அமைச்சரவையில் திமுக சேர சோனியா வலியுறுத்தல்: 18ம் தேதி டெல்லி செல்கிறார் கருணாநிதி
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மதவாத ஆட்சியும், மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சியும் தோற்கடிக்கப்பட்டுள்ளன என்றுதிமுக தலைவர் கருணாநதி கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அங்கே மதவாத ஆட்சி, இங்கே மக்கள் விரோத ஆட்சி. இரண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று வாசன் சொல்லியுள்ளார். நான் அப்படிச் சொல்லவிரும்பவில்லை. தார்மீகப் பொறுப்பேற்று அதற்கேற்ப ஜெயலலிதா செயல்பட வேண்டும். தார்மீகப் பொறுப்பேற்றால் என்னசெய்ய வேண்டுமோ அதை அவர் செய்ய வேண்டும்.
சோனியாவிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது, திமுகவும் அமைசச்ரவையில் சேர வேண்டும் என்று கூறினார். அதைநான் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தோழர்களுடன் கலந்து, உரிய முடிவை டெல்லி வரும்போது நேரில் பேசலாம் என்றுகூறியுள்ளேன். 18ம் தேதி வாக்கில் டெல்லி செல்லவுள்ளேன்.
சோனியா காந்தி இந்தியாவின் மருமகளாகி பல ஆண்டுகள் ஆகிறது. இதை தீவுத்திடல் கூட்டத்தில் கூறினேன். இந்திராவின்மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்றேன். அப்போது சொன்னது இப்போது பலித்து விட்டது. மருமகளாகவந்தார், இப்போது திருமகளாக ஆட்சிக்கும் வந்து விட்டார்.
காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்க முலாயம் சிங் ஆதரவையும் நாடுவோம். ஆனால் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்துள்ளவெற்றியே ஆட்சி அமைக்க போதுமானதாக உள்ளது.
காவிரிப் பிரச்சினைக்கு நிரந்ததர் தீர்வு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புதான். அதை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.வாஜ்பாய்க்கு எதிரான தீர்ப்பா இது என்ற கேள்விக்கே இடமில்லை. அவருக்கு ஆதரவானது என்று யார் கூறினார்கள்?
ரஜினி காந்த் இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். ஆயினும் பிரசாரத்திற்கு அவர் செல்லவில்லையே?இன்னும் என்னை நண்பராகத்தான் அவர் கருதுவதாக நினைக்கிறேன் என்றார் கருணாநிதி.
கருணாநிதியுடன் விபிசிங் பேச்சு:
இந் நிலையில் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங், காங்கிரஸ்அமைச்சரவையில் திமுக பங்கேற்று நிலையான அரசு அமைய உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இது குறித்து டெல்லியில் வைத்துப் பேசலாம் என சிங்கிடம் கருணாநிதி கூறியுள்ளார். சிங்கின் ஆட்சியின்போதுகருணாநிதி அவருக்கு மிக நெருக்கமானார் என்பது நினைவுகூறத்தக்கது.
சோனியா-பவார் சந்திப்பு:
இந் நிலையில் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்துப் பேசினார்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அந்தக் கட்சி மக்களவைத் தேர்தலில் 9 இடங்களைப் பிடித்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications