ராஜினாமா செய்ய மாட்டேன்: ஜெயலலிதா
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுவும் பா.ஜ.கவும் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்துள்ள நிலையில்முதல்வர் பதவியை விட்டு நான் விலக வேண்டிய அவசியமில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு பெரும் தோல்வி கிடைத்ததையடுத்து ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று திமுக, காங்கிரஸ்,பா.ம.க., மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று முழுவதும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் ஆழ்ந்த அமைதி காத்த ஜெயலலிதா நேற்று இரவில்ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். தற்போது நடந்துள்ளது நாடாளுமன்றத் தேர்தல். இதில் அதிமுகதோல்வியுற்றுள்ளதால் நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தேர்தல் எனது அரசின் மீதான கருத்துக் கணிப்புஅல்ல.
இதுதான் உண்மை. இதுதான் அரசியலின் அடிப்படையும் கூட. ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் சில கட்சிகள் நான் பதவிவிலக வேண்டும் என்று கூறுவது விந்தையாக உள்ளது.
1999ம் ஆண்டு அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாண்டிச்சேரியில் கூட திமுகவால் வெல்ல டியவில்லை.அப்போது கருணாநிதி தான் முதல்வராக இருந்தார். தோல்விக்குப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்தாரா?
தேர்தல் முடிவு திமுக அரசுக்கு எதிரான கருத்துக் கணிப்பு அல்ல தேர்தல் என்று விளக்கம் அளித்தார். அது எனக்கும் பொருந்தும்.எனது கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications