கர்நாடகம்: ஆட்சி அமைக்க பாஜக முயற்சி- தடுக்க காங்கிரஸ் தீவிரம்
பெங்களூர்:
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் எழுந்துள்ளதால், அதிகஇடங்களைப் பிடித்துள்ள பா.ஜ.க ஆட்சியமைக்க தீவிரமாக முயன்று வருகிறது.
இதற்கு, முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவைப் பெற பா.ஜ.க. முயற்சிமேற்கொண்டுள்ளது.
ஆனால், பா.ஜ.க ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் வகையில், மதசார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்க வைத்து,அதற்கு வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆட்சி குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவெடுக்கப்படும் என கெளடா இன்று அறிவித்தார். அவர்கூறுகையில், மதசார்பின்மையை விட்டுக் கொடுக்காத நல்ல அரசு கர்நாடகத்தில் அமையும். கட்சியின் மத்தியக்குழு டெல்லியில் இன்று மாலை கூடி இது குறித்து ஆலோசிக்கும் என்றார்.
கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க. 79 இடங்களில் வென்றுள்ளது. அதன்கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 5 இடங்களில் வென்றுள்ளது. இதனால் இக் கூட்டணியிடம் 84எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 58 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள்மற்றும் இதர கட்சிகள் 17 இடங்களில் வென்றுள்ளன.
ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரசும்-கெளடாவும் இணைந்தால் 123 எம்.எல்.ஏக்கள்உள்ளனர். இந் நிலையில் அழ்ந்த அமைதி காத்து வரும் கெளடா, காங்கிரசையும் பாஜகவையும் பெரும்எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இன்று தனது கட்சியின் புதிய எம்.எல்.ஏக்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ள கெளடா, மாலையில் டெல்லி செல்கிறார்.அவரை சோனியா காந்தி சந்திக்கக் கூடும் என்றும் தெரிகிறது.
கர்நாடகத்தில் காங்கிரசுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளதால் அக் கட்சியை தேவே கெளடா ஆதரிக்கக் கூடாதுஎன பா.ஜ.கவின் கர்நாடக மாநில பொறுப்பாளரான முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லிகூறியுள்ளார்.
கெளடாவை சந்திக்கவும் ஜேட்லி முன் வந்துள்ளார். ஆனால், கெளடாவிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை.
பிரதமராக இருந்த தேவே கெளடாவின் ஆட்சியை காங்கிரஸ் தான் கவிழ்த்தது என்பது நினைவுகூறத்தக்கது.
கர்நாடகத்தில் இரு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.
ஒரிஸ்ஸாவில் பிஜூ-பா.ஜ.க. ஆட்சி:
ஒரிஸ்ஸா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம், பா.ஜ.க.கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் அங்கு அந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கவுள்ளது.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications