பிரபாகரனை ஒப்படைக்க புதிய அரசு கோரலாம்: கதிர்காமர்
வாஷிங்டன்:
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என அந் நாடு கோரிக்கை வைக்க வாய்ப்பிருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமர் கூறியுள்ளார்.
அமெரிக்கா வந்துள்ள அவர் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுகையில்,
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனை தங்களிடம் ஒப்படைக்குமாறுஇந்தியாவில் அமையப் போகும் புதிய அரசு கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் எந்த அளவுக்குஅந்த விஷயத்தில் எங்களுக்கு நெருக்குதல் தரும் என்று தெரியவில்லை.
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததால், ஆட்சியில் இருந்த பா.ஜ.க. இந்த விவகாரத்தில்எங்களை அதிகம் நெருக்கவில்லை.
காங்கிரஸ் அரசு நெருக்கடி தருமானால், அது சர்வதேச விதிகளின் கீழ், முறைப்படி தான் கோரிக்கை வைக்கவேண்டும். எங்கள் நீதிமன்றங்கள் வழியாகத் தான் வர வேண்டும். இதில் நாங்கள் (இலங்கை அரசு) செய்வதற்குஎதுவும் இல்லை.
இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்குமாறு புலிகள் எங்களைக் கோரினால், அதை ஏற்கக் கூடிய நிலையில்நாங்கள் இருக்க மாட்டோம் என்றார் கதிர்காமர்.
அமைதிப் பேச்சு: அரசுத் தூதர் நியமனம்
இந் நிலையில் விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அரசின் சார்பில் பங்கேற்க, முன்னாள்ஐ.நா. அதிகாரியான ஜெயந்த தனபாலாவை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நியமித்துள்ளார்.
பிரதமர் ரணிலின் ஆட்சியில் இந்தப் பொறுப்பில் அமைச்சர் பெரிஸ் இருந்தார்.
தனபாலா, ஐ.நாவின் ஆயுத ஒழிப்புப் பிரிவின் துணை பொதுச் செயலாளராக ஜெனவாவிலும், வாஷிங்டனிலும்பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து நார்வே குழுவினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications