மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து திமுக, பாமக இன்று மாலை முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்தியில் சோனியா காந்தி தலைமையில் அமையும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்று மாலை திமுகமுடிவெடுக்கும் என அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார். புதிய காங்கிரஸ் அரசு அமைப்பது குறித்து சோனியா,தலைவர்களுடன் ஆலோசனை நடத்த நாளை அவர் டெல்லி செல்கிறார்.

அதே போல பா.ம.கவும் மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து தனது முடிவை இன்று அறிவிக்கும் என அக் கட்சியின்நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களிலும் வென்ற, ஜனநாயக முற்போகுக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்இன்று கருணாநிதியின் தலைமையில் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் சட்டமன்றத்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,

இன்று மாலை திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 15எம்.பிக்களும் கலந்து கொள்ளவர். கூட்டத்தில் மத்தியில் ஆட்சியில் பங்கேற்பதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசிமுடிவு செய்யப்படும் என்றார்.

நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில், திண்டிவனத்தில் எங்கள் கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் மத்தியஅரசில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

பெரும்பாலான திமுக நிர்வாகிகள், மத்திய அரசில் பங்கேற்க வேண்டும் என கருணாநிதியை வலியுறுத்தி வருவதுகுறிப்பிடத்தக்கது. இதனால் அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்ற கருணாநிதியின் நிலையில் மாற்றம் வரலாம் என்றுதெரிகிறது.

அதே போல பா.ம.கவும் மத்திய அரசில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாகவே தெரிகிறது.

இந் நிலையில் கருணாநிதி நாளை டெல்லி செல்கிறார். உடல் நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விமான பயணத்தைகருணாநிதி தவிர்த்து வந்தார். இந் நிலையில் நாளை காலை விமானம் மூலமே டெல்லி செல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+