அமைச்சரவையில் இப்போதைக்கு சேர மாட்டோம்: திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்தியில் அமையும் சோனியா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் இப்போதைக்கு பங்கேற்பதில்லை எனதிமுக முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாட்டை மதிப்பிட்ட பின்னர் அமைச்சரவையில் சேருவது குறித்துமுடிவெடுக்க கருணாநிதிக்கு திமுக தலைமைச் செயற்குழு அனுமதி வழங்கியது.

அமைச்சரவையில் சேருவது குறித்து விவாதிக்க நேற்று மாலை 4 மணிக்கு திமுக செயற்குழுக் கூட்டம் கூடியது.இதில் புதிய எம்பிக்கள் 15 பேரும் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சரவையில் சேருவது குறித்து ஒருமனதான முடிவு ஏற்படவில்லை. பா.ஜ.க. தலைமையிலானஅமைச்சரவையில் சேர்ந்ததால் பல்வேறு கொள்கைகளை விட்டுத் தர வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டதைமூத்த தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.

திமுக தலைவர் கருணாநிதியும் இதையே சுட்டிக் காட்டிப் பேசினார். இதை பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றாலும், சிலர்அமைச்சரவையில் இடம் பெற்றால் தான் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசை சமாளிக்க முடியும் என்றவாதத்தை முன் வைத்தனர்.

இறுதியில் இப்போதைக்கு மத்திய அமைச்சரவையில் சேர வேண்டாம் என்றும், சோனியா அரசின் செயல்பாட்டை கவனித்து,உரிய அவகாசம் தந்து, அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து, தேவைக்கேற்ப, கருணாநிதி முடிவெடுக்கலாம் என்றும்நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து முடிவெடுக்க கால அவகாசம் எதையும் நாங்கள் வைத்திருக்கவில்லை.

இப்போதைக்கு அமைச்சரவையில் பங்கேற்காமலேயே நிலையான ஆட்சி அமைய சோனியா காந்திக்கு எந்த அளவுக்கு முழுஆதரவும், ஊக்கமும் தர முடியுமோ அதை நிச்சயமாகத் தருவோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்று முதல் குரல் தந்ததே திமுக தான். எனவே அவரது தலைமையிலான ஆட்சிநிலைத்திருக்க வேண்டும், நீடிக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு மிகுந்த அக்கறை உண்டு.

கூட்டணி அரசின் செயல்பாட்டுக்காக மன்மோகன் சிங் உருவாக்கி வரும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் எங்கள்கோரிக்கைகளையும் சேர்க்க, கட்சியின் தேர்தல் அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறோம் என்றார் கருணாநிதி.

இதையடுத்து கேள்விகளுக்கு அவர் தந்த பதில்கள்:

நிருபர்: செயல் திட்டத்தில் பொடா சட்டத்தை வாபஸ் பெறும் கோரிக்கையும் இடம் பெற வேண்டும் என்று கோரியுள்ளீர்களா?

கருணாநிதி: சொல்லாமல் இருப்போமா

நிருபர்: நீங்கள் துணைப் பிரதமர் ஆக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்களே?

கருணாநிதி: எனக்குத் தெரியாது. பத்திரிக்கைகளில் அதைப் படித்துவிட்டு திமுக தோழர்கள் ஆர்வமாக பேசிவருகிறார்கள். நான் திமுக தலைவராக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன்.

நிருபர்: தேர்தல் தோல்விக்கு அதிமுக பா.ஜ.கவையும் பா.ஜ.க அதிமுகவையும் குற்றம் சாட்டி வருகின்றனவே?

கருணாநிதி: அவர்களது தகராறில் நான் தலையிட விரும்பவில்லை.

நிருபர்: சோனியாவின் அமைச்சரவையில் சேர வேண்டாம் என முடிவு செய்ததற்கு வாஜ்பாய் அரசில் ஏற்பட்டகசப்பான அனுபவங்கள் தான் காரணமா?

கருணாநிதி: அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனால், வாஜ்பாய் அரசில் கசப்பான அனுபவம் ஏற்பட்டதைமறுக்கவில்லை.

நிருபர்: உங்களுடைய இந்த முடிவு காங்கிரசிடம் பேரம் பேசுவதற்காக எடுக்கப்பட்ட முடிவாக எடுத்துக்கொள்ளலாமா?

கருணாநிதி: இது அசிங்கமான கேள்வி. என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது.

நிருபர்: உங்களின் இந்த முடிவு ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ?

கருணாநிதி: எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+