மத்திய அமைச்சரவையில் சேருகிறது பாமக: மாலை ராமதாஸ் டெல்லி பயணம்
விழுப்புரம்:
மத்திய அமைச்சரவையில் சேருவது என பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
பாமக செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் அருகே வானூர் என்ற இடத்தில் நேற்று மாலை நடந்தது. இக் கூட்டத்தில்அமைச்சரவையில் சேருவதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட விவாதம் நடந்தது.
இப்போதைக்கு அமைச்சரவையில் சேருவதில்லை, பின்னர் சேருவது குறித்து யோசிக்கலாம் என திமுக ஸ்டைலில் முதலில்முடிவெடுக்கப்பட்டு, முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வழங்கி தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இன்று அதிகாலை வரை தொடர்ந்து நடந்த கூட்டத்தின் இறுதியில் அமைச்சரவையில் சேருவது என்று முடிவுசெய்யப்பட்டது.
ஏ.கே. மூர்த்தி போன்றவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்று தமிழகத்துக்கு பல நன்மைகளைச் செய்ததை சுட்டிக் காட்டிப்பேசிய நிர்வாகிகள், மத்திய ஆட்சியில் இடம் பெறுவதே நல்லது என வலியுறுத்தினர்.
இதையடுத்து ஆட்சியில் சேருவது என தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்திலும்இந்த முடிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
இதனை அதிகாலையில் நிருபர்களிடம் தெரிவித்த ராமதாஸ், இன்று மாலை டெல்ல சென்று காஙகிரஸ் கூட்டணித் தலைவர்கள்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் சோனியா காந்தி அரசுக்கு, தனது கட்சியின் ஆதரவு வழங்குவதற்கான கடிதத்தை குடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடமும் வழங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவும், மதிமுகவும் அமைச்சரவையில் சேருவதில்லை என்ற முடிவைமேற்கொண்டுள்ள நிலையில், பாமக மட்டுமே அமைச்சரவையில் சேர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம் ஆகியோரும், அதற்கு முன் பொன்னுச்சாமியும்அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறை அமைச்சராக மூர்த்திக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதே என்று தெரிகிறது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications