இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத சரிவு: புரோக்கர்களுக்கு மன்மோகன் சிங் எச்சரிக்கை
டெல்லி:
இடதுசாரிகளின் ஆதரவோடு மத்தியில் அடுத்த அமைய இருப்பதால் மும்பை பங்குச் சந்தையில்வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. பஙகுகளின் விலையில் ஒரே நாளில் 2 லட்சம் கோடி ரூபாய்வீழச்சி ஏற்பட்டது.
இதற்குக் காரணமாக புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர்ஆகவுள்ள மன்மோகன் சிங் கடும் எச்சரிக்கை விடுத்ததையடுத்து நிலைமை ஓரளவு கட்டுக்குள்வந்துள்ளது.
மேலும் பங்குகளில் முதலீடு செய்து வீழ்ச்சியைத் தடுக்குமாறு ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு(எல்.ஐ.சி) மன்மோகன் சிங் வாய்மொழி உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து பெரும்எண்ணிக்கையிலான பங்குகளை எல்.ஐ.சி. வாங்கியதால் விலை வீழ்ச்சி கட்டுக்குள் வந்தது.
இன்று காலை சந்தையில் வர்த்தம் தொடங்கிய சில நிமிடங்களில் 550 சரிவு புள்ளிகள் சரிவுஏற்பட்டது. இதனால் பங்குகளின் மதிப்பு ரூ. 1,35,000 கோடி குறைந்துவிட்டது. இதையடுத்துவர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆனால், மீண்டும் வர்த்தகம் தொடங்கியதும் மேலும் 272 புள்ளிகள் வீழ்ந்தது. இதனால் மொத்தம் 2லட்சம் கோடி அளவுக்கு பங்குகளின் மதிப்புகள் சரிந்தன.
ஒரே நாளில் பங்குச் சந்தையில் ரூ. 2,00,000 கோடி இழப்பு ஏற்பட்டது இதுவே முதல்முறையாகும்.இதையடுத்து வர்த்தகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு பா.ஜ.க ஆதரவு புரோக்கர்களின் செயல் தான் காரணம்என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பா.ஜ.கவின் தூண்டுதலால் நடந்துள்ள சதி இது என்று கூறிய சிபிஐ பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன்,தோல்வியில் இருந்து பா.ஜ.க. பாடம் கற்றதாகத் தெரியவில்லை என்றார்.
இதையடுத்து, அடுத்த நிதியமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கருதப்படும் காங்கிரஸ் தலைவர்மன்மோகன் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,
ஆட்சி மாற்றத்தை மையமாக வைத்து, சில நிதி நிறுவனங்களும், புரோக்கர்களும் சேர்ந்து கொண்டுபங்குச் சந்தையில் தேவையில்லாத களேபரத்தைத் தூண்டிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீதுஎங்கள் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கிறேன்.
முதலீட்டாளர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராத வகையில் தான் எங்களது அரசின் செயல்பாடுஇருக்கும் என்றார்.
இதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் மீண்டும் வர்த்தம் தொடங்கியபோது, 438 புள்ளிகள்உயர்ந்தன, பங்குகளின் விலை வீழ்ச்சியும் நின்றது.
தீவிர தனியார்மயமாக்கலை அனுமதிக்க மாட்டோம், பொதுத்துறை நிறுவனங்களை விற்க விடமாட்டோம், பொருளாதார சீர்திருத்தத்தங்களில் பா.ஜ.க. கொண்டு வந்த திருத்தங்களை வாபஸ் பெறவைப்போம், கண்மூடித்தனமான அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என இடதுசாரிகள்கூறியுள்ளதால் பங்குச் சந்தையில் முதலீட்டார்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
பல அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளனர். இதனால்அன்னிய முதலீடுகளைக் கொண்ட தனியார் நிறுவனங்களின் பங்குகள் படு வேகமாக சரிந்தன.
இதற்கிடையே பதவி விலகிச் செல்லும் நிதியமைச்சரான ஜஸ்வந்த் சிங், தேவையில்லாத பீதியைஏற்படுத்தி பங்குச் சந்தையை நிலைகுலைக்க முயன்ற புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications