சென்னையில் வேகமாய் பரவுகிறது காலரா: 2 பேர் சாவு- 200 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
வட சென்னை பகுதியில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க வீடு வீடாக குளோரின்மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் பெய்த மழையால் தேங்கிய அசுத்தமான நீர் குடிநீர் குழாய்களில் நுழைந்துவிட்டதால் காலாராபரவியதாகத் தெரிகிறது. நோய்க்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர்தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பட்டாளம் பகுதியைச் சேர்ந்த தனலெட்சுமி (40), ஓட்டேரியைச் சேர்ந்த அழகேசன் (23) ஆகிய இருவரும் காலராநோய்க்கு பலியானவர்கள்.
காலரா நோய் மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னைமாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு, சென்னை பெருநகர குடிநீர் வினியோக வாரியம் ஆகியவை இணைந்துகுளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.
குடிநீரை காய்ச்சிக் குடிக்குமாறும், வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவை ஏற்பட்டால் உடனடியாகமருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் சில நாள்களுக்கு குழாய் தண்ணீரைக் குடிக்க வேண்டாம், லாரி தண்ணீரையே பயன்படுத்த வேண்டும், ஈமொய்க்கும் பண்டங்களை வாங்க வேண்டாம் என்று பொது மக்களை சுகாதரத் துறை அதிகாரிகள்கேட்டுக்கொண்டுள்ளனர்.
காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ளவர்களை உடனடியாக தண்டையார் பேட்டை தொற்றுநோய்மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவக் குழுவினர் வீதி வீதியாகச் சென்று அறிகுறிகள் இருக்கிறதா என விசாரித்து,அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
காலரா அவசர சிகிச்சைக்கு 25952687, 25952688, 25383611 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications