இன்பத்தமிழனை கைது செய்ய கோரி திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை :
சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை துப்பாக்கியால் சுட முயன்ற அமைச்சர் இன்பத் தமிழனை கைதுசெய்யக்கோரி தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிப்பிப்பாறை ரவிச்சந்திரனைதுப்பாக்கியால் சுட முயன்ற அமைச்சர் இன்பத்தமிழனை கைது செய்யக்கோரியும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்த ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடந்த 12ம் தேதி முடிவு செய்தனர்.
இதனையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, மதிமுக, பா.ம.க.,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னையில் நடந்த போராட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஏ.செளந்தர்ராஜன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் சத்யா, இந்திய யூனியன்முஸ்லீம் லீக் சார்பில் எம்.ஜெய்னுலாபுதீன், முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கைது செய் கைது செய் இன்பத்தமிழனை கைது செய், நடவடிக்கை எடு நடவடிக்கை எடு இன்பத்தமிழன் மீது நடவடிக்கை எடு, கொலைவெறி பிடித்த இன்பத்தமிழனே உடனே பதவி விலகு, வாக்காளர் உரிமையை பறித்த ஜெயலலிதாவே ராஜினாமா செய் ராஜினாமாசெய் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
வெற்றி விழா கொண்டாடிக்கொண்டாடும் நேரத்தில் நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்பத்தமிழனைகைது செய்ய வேண்டும் என்று நான் மட்டும் சொல்லவில்லை. அவரது தந்தை தாமரைக்கனியும் கூறுகிறார். அவர் இந்தமேடையில் தான் இருக்கிறார். இன்பத்தமிழனை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும்.
இன்பத்தமிழன் ரவிச்சந்திரனை கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா ஜனநாயகத்தையே கொலை செய்யமுயற்சிக்கிறார். தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பேரை நீக்கியதற்காக ஜெயலலிதா பதவி விலகவேண்டும் என்று நாங்கள்கூறுகிறோம். சோனியா காந்தி தலைமையில் அமையும் புதிய ஆட்சியினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள்நம்புகிறோம் என்று பேசினார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications