பிரதமர் பதவிக்கு சோனியாவின் பெயரை முன்மொழிந்த கருணாநிதி
டெல்லி:
டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என திமுகதலைவர் கருணாநிதி முன்மொழிந்தார். இதை கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்தக் கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
சோனியாவின் இல்லத்தில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில் கூட்டணியில் இடம் பெறாத சமாஜ்வாடி கட்சியும்,அஜீத்சிங்கின் கட்சியும் பங்கேற்று, சோனியா பிரதமராக ஆதரவு தெரிவித்தன. பின்னர் ஜனாதிபதியிடம் இந்தக்கட்சிகள் நேரடியாக ஆதரவுக் கடிதம் தந்தன.
இக் கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செஞ்சி ராமச்சந்திரன்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தாமதமாக வந்த வைகோவை காங்கிரஸ் மூத்ததலைவர்களான மன்மோகன் சிங்கும், கமல்நாத்தும் கட்டித் தழுவி வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இக் கூட்டத்திற்குப் பின் நடந்த விருந்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் கலந்து கொண்டார். முன்னதாகவி.பி.சிங்கை கருணாநிதி அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது சோனியாவின்அமைச்சரவையில் திமுக உடனடியாக சேர வேண்டும் என சிங் கோரிக்கை விடுத்தார்.
தான் வரைந்த ஓவியம் ஒன்றையும் கருணாநிதிக்கு விபி சிங் பரிசாக அளித்தார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications