தோற்றாலும் செல்வாக்கு குறையவில்லை: திருமாவளவன்
சென்னை:
மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் எனது செல்வாக்கோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செல்வாக்கோஇம்மியளவும் குறையவில்லை. மக்கள் ஆதரவு எங்களுக்கு கூடியுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் கூட்டணி வேட்பாளர்களில் திருமாவளவன் மட்டுமே ஓரளவுக்கு ஓட்டுக்கள்பெற்றுள்ளார். போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்திருமாவளவன்.
பாஜக வேட்பாளரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிய திருமாவளவன், 2.66 லட்சம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளார்.
மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, எஸ்.கண்ணப்பன் ஆகியோர் 3வது இடங்களைப் பெற்றுபடுதோல்வி கண்டுள்ளனர்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த தேர்தலில் பெற்றதை விட 31,000 வாக்குகள் கூடுதல்பெற்றுள்ளேன். காட்டு மன்னார்கோவில் சட்டசபைத் தொகுதியில் பாமக வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளேன்.
திமுக கூட்டணிக்கு இம்முறை 4,000 ஓட்டுக்கள் குறைந்துள்ளன. பாமக இத்தொகுதியில் கடந்த 1989, 91, 96 ஆகியதேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. அப்போதெல்லாம் 1.5 லட்சம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாமல் திண்டாடியது.
அதன் பிறகு அதிமுக ஆதரவுடனும், திமுக ஆதரவுடனும் தேர்தலில் போட்டியிட்டு அவர்களின் வாக்கு வங்கி மூலம் வெற்றிபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் ஒட்டு மொத்தமாக 9,37,462 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் அழியவில்லை, தமிழக அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் தொடர்ந்து உள்ளது என்பதைஇந்தத் தேர்தல் மூலம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு புரிய வைத்துள்ளோம் என்றார் திருமாவளவன்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications