8 ஆண்டுக்கு பின் பிடிபட்ட இறந்துபோன குற்றவாளி!!
மதுரை:
இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட கொலைக் குற்றவாளியை 8 ஆண்டுகளுக்குப் பின் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த பெண் நாகஜோதி. இவரை செல்வம் என்பவர் காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவிரும்பினார். இதனையடுத்து செல்வமும், பாலமுருகன் என்ற அவரது நண்பரும் நாகஜோதியுடன் கேரளாவுக்குரயிலில் கிளம்பினர்.
அங்கு நாகஜோதியை செல்வம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதாகத் திட்டம். இதைத் தெரிந்துகொண்ட நாகஜோதியின் அண்ணன் சங்கிலிக் கருப்பன் என்பவர் செல்வத்தைத் தடுத்தார். இதனையடுத்து நடந்தமோதலில் சங்கிலிக் கருப்பன் ஓடும் ரயிலில் கொல்லப்பட்டார். இது நடந்தது 1992ம் வருடம்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், நான்கு வருட தேடலுக்குப் பின் 1996ம் வருடம்செல்வத்தையும், பாலமுருகனையும் கைது செய்தனர். பின்னர் இருவர் மீதும் மதுரை மாவட்டத்தில் பல கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதே வருடம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது, செல்வம் போலீஸ் காவலில்இருந்து தப்பியோடினார். சில மாதங்களுக்குப் பின், மதுரை அவனியாபுரத்தில் ஒரு வாலிபரின் பிணத்தைக்கண்டுபிடித்த போலீஸார்,
அது செல்வம்தான் என்றும் அடையாளம் தெரியாத கும்பலால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி செல்வம்தொடர்பான வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இந் நிலையில் இறந்த போனதாகக் கூறப்பட்ட செல்வம் சென்னையில் ஒரு இறைச்சிக் கடை வைத்து ஜாலியாகவாழ்க்கை நடத்துவது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து சென்னைக்கு விரைந்த மதுரை சிறப்புப்போலீஸ் படை செல்வத்தைக் கைது செய்தது. இப்போது செல்வம் காவலில் இருக்கிறார்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு












Click it and Unblock the Notifications