போலீஸாருக்கு தண்ணி காட்டிய விசாரணைக் கைதி !
பெரம்பலூர்:
பெரம்பலூர் பஸ் நிலையத்தில் போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிய விசாரணைக் கைதி உயரமான கட்டடம் ஒன்றின்மீது ஏறிக் கொண்டு தற்கொலை செய்யப் போவதாக கூறி போலீஸாருக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் நன்மங்கலம் கிராமத்தில் கற்பழிப்பு முயற்சி புகார் தொடர்பாக வரதராஜன் என்பவரைபோலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்காக பெரம்பலூருக்கு போலீஸார் அழைத்துவந்தனர்.
அப்போது பஸ் நிலையத்தில் போலீஸார் நின்றிருந்தபோது, வரதராஜன் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்.போலீஸார் அவரை துரத்திச் சென்றனர். வேகமாக ஓடிய வரதராஜன் அங்கிருந்த ஒரு உயரமான கட்டடத்தின் மீதுஏறினார்.
தன்னை போலீஸார் பிடிக்க முயன்றால் கீழே குதித்துத் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். இதைப்பார்த்ததும் அங்கு மக்கள் கூட்டம் கூடியது. போலீஸார் வரதராஜனிடம் சமாதானப்பேச்சு நடத்தினர். நீண்ட நேரபேச்சுவார்த்தைக்குப் பின்னர் வரதராஜன் சமாதானம் அடைந்து கீழே இறங்கி வந்தார்.
அதன் பின்னர் அவரைக் கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸாருக்கும், கைதிக்கும் இடையேநடந்த இந்த கலாட்டாவால் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications