செல்வ அரசி கணவர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு தாக்கல்
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவி ரோஸ்லின் செல்வஅரசியின் காதல் கணவர் பிரதாப்பை மாமனாரே ஆள்வைத்துக் கடத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செல்வ அரசியும் பிரதாப்பும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது திருமணத்துக்கு செல்வஅரசியின் தந்தை ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இந் நிலையில் பிரதாப் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராதாகிருஷ்ணனின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து ராதாகிருஷ்ணன் தலைமறைவானார். இந் நிலையில் கொலை செய்யப்பட்ட பிரதாப்பின் சகோதரர்அமிதாப், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
இந்த வழக்கில் போலீஸார் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்து வருகின்றனர். எனவே, வழக்குவிசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிபாலசுப்ரமணியன், நீதிபதி கண்ணதாசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், விசாரணை தொடர்பான போலீஸாரின்அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்குஅடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications