கலாமை சந்திப்பதில் தாமதம்: சோனியா பிரதமராவதில் சிக்கல்?
டெல்லி:
மத்தியில் பதவியேற்க காங்கிரஸ் கட்சிக்கு குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நேற்றுஅழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று காலை கலாமை சோனியா காந்தி சந்திக்கிறார்.
காலை 9.30 மணிக்கு நடப்பதாக இருந்த இச் சந்திப்பு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இன்றே இச் சந்திப்பு நடக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பின்போது சோனியா பிரதமராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை கலாம் வழங்குவார் என்றுதெரிகிறது.
முன்னதாக நேற்றிரவு சோனியா பிரதமராக மாட்டார் என வதந்தி பரவியது. திடீரென சோனியாவில்இல்லத்தில் நேற்றிரவு கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. அதில் திமுகதலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அப்போது, தான் பிரதமராக சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் போட்டியில்இருந்து விலகிக் கொள்வதாகவும், வேறு ஒருவரை பிரதமராக்கலாம் என்றும் சோனியா கருத்துதெரிவித்தார்.
ஆனால், இதை கூட்டணிக் கட்சிகள் ஏற்கவில்லை. சங் பரிவாருக்கும் பா.ஜ.கவின்நெருக்குதலுக்கும் பணியவே கூடாது என கூறிவிட்டன. இதையடுத்தே பிரதமராக சோனியா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இக் கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங், சோனியாபிரதமராக மாட்டார் என்பது வெறும் வதந்திதான். அவர் நாளை குடியரசுத் தலைவரை சந்திப்பார்.நாளை மறுதினம் பதவியேற்பார் என்று அறிவித்தார்.
இந் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு கலாமை சோனியா சந்திக்க இருந்தார். ஆனால் இதுவரைஇச் சந்திப்பு நடக்கவில்லை.
இதனால் சோனியா பிரதமராவாரா என்ற கேள்வி தொடர்ந்து கொண்டுள்ளது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications