வாபஸ் நடவடிக்கை ஏன்? ஜெ. தரும் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பல்வேறு வாபஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மீதான தண்டனை, பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகள், அரசியல்வாதிகள் மீதான வழக்குகள், கட்டாயமதமாற்ற தடை சட்டம், இலவச மின்சாரம் ரத்து, குடும்ப அட்டைகளுக்கு எச். முத்திரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைரத்து செய்து ஜெயலலிதா நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தல் தோல்வி காரணமாகவே இந்த வாபஸ் நடவடிக்கையை ஜெயலலிதா மேற்கொண்டுள்ளதாக பேச்சுஎழுந்துள்ளது. இந் நிலையில், தனது நடவடிக்கை குறித்து ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான தண்டனையை ரத்து செய்தது குறித்து ஜெயலலிதா விளக்கமளிக்கையில், அரசுக்கும், அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கவும், புத்துண்ச்சியோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்பணியாற்றவும், நம்பிக்கையுடன் பணியில் அவர்கள் ஈடுபடும் நோக்கத்திலுமே இந்த தண்டனைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு மனப்பான்மையுடனும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செயல்படுவார்கள் என்றநம்பிக்கையில் அவர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் வாபஸ் குறித்து அவர் கூறியுள்ள விளக்கம்: மத ஒற்றுமையை மேலும் வலுவாக்கும்நோக்கத்தோடுதான் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை நான் கொண்டு வந்தேன். சிறுபான்மையினருக்கு எதிராக இந்தசட்டத்தைப் பயன்படுத்தும் எண்ணம் கடுகளவு கூட எனக்கு இல்லை.

ஆனால் இந்த சட்டத்தை வாபஸ் பெறுமாறு சில சிறுபான்மை மதத் தலைவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால், சட்டத்தைவாபஸ் பெற உத்தரவிட்டுள்ளேன். கிறிஸ்தவர்களாகட்டும், முஸ்லீம்களாகட்டும் சிறுபான்மையினரின் காவலனாகவே எனதுஅரசு விளங்கி வருகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது குறித்து ஜெயலலிதா கூறுகையில், இந்த நடவடிக்கையை சரியானமுறையில் பயன்படுத்திக் கொண்டு நேர்மையான, நியாயமான முறையில் செய்திகளை பத்திரிக்கைகள் கொடுக்கும் என்றுநம்புகிறேன்.

பாரபட்சமற்ற முறையில் நடுநிலையோடு செய்திகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பத்திரிக்கை தர்மத்தைகாக்க அவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் மீதான வழக்குகளை நீக்க உத்தரவிட்டுள்ளேன்.

பொறுப்புடனும், சட்டசபை மாண்புகளை மதிக்கும் வகையிலும் பத்திரிக்கையாளர்கள் நடந்து கொள்வார்கள் என்றநம்பிக்கையில் சட்டசபையில் நிலுவையில் உள்ள உரிமை மீறல் பிரச்சினைகள் அனைத்தும் கைவிடப்படும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+