ஏரியில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 4 சிறுவர்கள் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தில் உள்ள ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 13), முருகன் (வயது 12), கார்த்திக் (வயது11), துரைராஜ் (வயது 14) ஆகியோர் அய்யப்ப நகரில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனர்.

வீட்டுக்குத் தெரியாமல் கிளம்பிய இவர்கள் ஏரியில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது நான்கு பேரும் ஏரிக்குள் மூழ்கினர்.

காலையில் வீட்டை விட்டுக் கிளம்பிய சிறுவர்கள் எங்கு போனார்கள் என்பது தெரியாமல் குழம்பிய குடும்பத்தினர் தேடத்தொடங்கினர். அப்போது ஏரியில் சில உடல்கள் மிதப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நான்கு சிறுவர்களின் குடும்பத்தினரும் அங்கு சென்று பார்த்தபோது அது தங்களது குழந்தைகள்தான் என்பதுதெரிந்து அழுது புரண்டனர்.

நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் சீனிவாசனும், கார்த்திக்கும் சதோகரர்கள். இருவரும் இறந்து விட்டதால் இவர்களது பெற்றோர் கதறி அழுததுபரிதாபமாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+