சோனியாவை தடுத்த ராகுல்-பிரியங்கா
டெல்லி:
பிரதமர் பதவியை ஏற்பதில்லை என்ற சோனியா காந்தியின் முடிவுக்கு அவரது மகன் ராகுல்காந்தியும், மகள் பிரியங்காவும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவரை பிரதமர் பதவியேற்க வேண்டாம் என தடுத்ததே இந்த இருவரும் என காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தான் பிரதமராக விரும்பவில்லை என கட்சி எம்.பிக்கள் மத்தியில் சோனியா அறிவித்தபோதுராகுலும் பிரியங்காவும் அங்கிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், என் தாயாரின் இந்த முடிவு எதிர்பார்த்தது தான். கடந்த6 ஆண்டுகளாகவே அவர் இதைத் தான் மனதில் நினைத்து வந்தார். இப்போது கட்சி ஆட்சிக்குவந்தாலும் அவர் தனது மனதை மாற்றிக் கொள்ளவிலலை. அவரது இந்த அறிவிப்பைமனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்றார்.
பிரியங்கா கூறுகையில், தன் உள் மனதும் மனசாட்சியும் சொன்னபடி நடந்து கொண்டதாக என்தாயார் கூறியிருக்கிறார்.
அவர் தன் உயிருக்குப் பயந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக சிலர் கூறியிருக்கிறார்கள். அவர்எதற்கும் பயப்படுகிற, கலங்குற ரகம் அல்ல. பிரதமர் என்ற பதவியில் இருந்தால் இப்போதுஇருப்பதை விட அதிக பாதுகாப்புடன் தான் அவர் இருப்பார்.
மனசாட்சி, உண்மையின் மீது நம்பிக்கை வைத்து முடிவெடுத்திருக்கிறார். அவரது முடிவு சரியானதேஎன்றார்.
முன்னதாகப் பேசிய சோனியா, மதவாத சக்திகளுடனான சண்டை தான் முடிவுக்கு வந்திருக்கிறது.அதில் நாம் வென்றிருக்கிறோம். ஆனால், போர் இன்னும் முடியவில்லை. மதவாத சக்திகளுக்குஎதிரான போரில் நான் காங்கிரசை முன்னின்று நடத்திச் செல்வேன். என்னை நம்புங்கள், கட்சியைநான் கைவிட மாட்டேன் என்றார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications