மன்மோகன் சிங் பிரதமராக வைகோ, ராமதாஸ் ஆதரவு
டெல்லி:
அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் மூத்த காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங்கைமதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பா.ம.க. நிறுவனர் ராமதாசும் இன்று சந்தித்துப் பேசினர். அவர்பிரதமராகவும் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது, பொடா சட்ட நீக்குவது ஆகியவற்றையும் காங்கிரஸ்கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வைகோ கோரிக்கை வைத்தார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வைகோ, காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர் பதவிக்குத் தேர்வுசெய்யப்பட்டாலும் மதிமுக ஆதரிக்கும். இதை சோனியா காந்தியிடம் தெரிவித்துவிட்டேன்.
சோனியாவே பிரதமராக வேண்டும் என்பது தான் எங்கள் நிலை. பிற கூட்டணிக் கட்சிகளும் அதைத் தான்விரும்புகின்றன. அவர் பிரதமராக வேண்டும் என்று தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் சோனியா என்ன முடிவெடுத்தாலும் அதை ஆதரிப்போம். அமைச்சரவையில் சேராவிட்டாலும்காங்கிரஸ் கட்சிக்கு மதிமுகவின் முழு ஆதரவு இருக்கும்.
பொடா சட்டத்தை காங்கிரஸ் அரசு நீக்கும் என்பது தெரியும். ஆனாலும் அதை குறைந்தபட்ச செயல் திட்டத்திலும்சேர்க்க வேண்டும் என்று மன்மோகன் சிங்கிடம் கோரியிருக்கிறேன்.
அதே போல தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதையும் செயல் திட்டத்தில் சேர்க்குமாறு கூறியிருக்கிறேன்.
இது தவிர பொருளாதார சீர்திருத்தம், மதசார்பின்மை, சமூக நீதி ஆகிய விஷயங்களுக்கும் செயல் திட்டத்தில்முக்கியத்துவம் தருமாறு கோரினேன் என்றார்.
ராமதாஸ்:
வைகோவைத் தொடர்ந்து சிங்கை சந்தித்த ராமதாஸ் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
மரியாதை நிமித்தமாகவே மன்மோகன் சிங்கை சந்தித்தேன். பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி யாரைத்தேர்ந்தெடுத்தாலும் ஒப்புக் கொள்வோம். கூட்டணி அரசு நடத்துவதற்கான குறைந்தபட்ச செயல் திட்டம் ஓரிருநாட்களில் தயாராகிவிடும் என்றார்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications