ஓடும் காரில் 100 பவுன் நகை கொள்ளை
கடலூர்:
கடலூர் அருகே ஓடும் காரில் ஏறிய 3 கொள்ளையர்கள், அதில் பயணித்தவர்களிடம் 100 பவுன் நகைகைள பறித்துக் கொண்டு காருடன் தப்பினர்.
புதுவையைச் சேர்ந்தவர் கைலாசம். தொழிலதிபரான இவர் தனது குடும்பத்தாருடன் காரில், வைத்தீஸ்வரன்கோவில் சென்று சாமி கும்பிட்டார். பின்னர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
கடலூர் அருகே கொள்ளிடம் அருகே கார் வந்தபோது 3 பேர் காரை வழிமறித்து நிறுத்தினர். தங்களை போலீஸார்என்று கூறிக் கொண்ட அவர்கள், சிறிது தூரத்தில் உள்ள காவல் நிலையத்தில் இறக்கி விட்டு விடுமாறுகேட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களை காரில் ஏற்றிக் கொண்டார் கைலாசம். ஆனால் கார் புறப்பட்டவுடன், 3 பேரும் மறைத்துவைத்திருந்த கத்திகளை எடுத்து கைலாசம் உள்ளிட்டவர்களை மிரட்டத் தொடங்கினர்.
பின்னர் காரில் இருந்த பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டனர். பின்னர் ஒவ்வொருவரையும்ஆங்காங்கே இறக்கி விட்டனர். அதன் பின்னர் காருடன் தப்பி விட்டனர்.
கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நகைகள் 100 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாகபோலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications