திமுகவின் வெற்றிக்காக கையை "தியாகம்" செய்த தொண்டர்!!
வேலூர்:
அதிமுகவில் மட்டும்தான் மூட நம்பிக்கை கொண்ட, முரட்டுத் தொண்டர்கள் இருப்பார்கள் என்பதை பொய்யாக்கியுள்ளார் திமுகவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக காவலர் ஒருவர் தனது கைவிரல்களை வெட்டிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல பெண் அதிமுக தொண்டர் ஒருவர் தனது ரத்தத்தால்அம்மனுக்கு அபிஷேகம் செய்தார்.
இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த ஒரு தொண்டர், அதிமுக தொண்டர்களுக்கு இணையாக ஒரு தியாகத்தைசெய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கோவில் மடிங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், தீவிர திமுக தொண்டர்.
மக்களவைத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், பர்வதமலை வனப்பகுதியில் உள்ள வன துர்க்கை கோவிலில் தனது கையை தானமாக கொடுப்பதாக இவர் வேண்டியிருந்தாராம்.
அவர் விரும்பியபடியே திமுக பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலுக்குச் சென்ற சண்முகம், தனதுஇடது கையை வெட்டிக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையை வெட்டிக் கொண்ட சண்முகம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications