அமைச்சரவை: சோனியா-சிங் ஆலோசனை
டெல்லி:
அமைச்சர்கள் நியமனம் குறித்து இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரதமராகவுள்ளமன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது மூத்த தலைவரான கமல்நாத்தும்உடனிருந்தார்.
அதே போல அமைச்சரவை குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் காங்கிரஸ்தலைவர் பிரனாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.
பீகாருக்கு அதிக நிதி ஒதுக்கினால் தான் கூட்டணியில் சேருவோம் என ராஷ்ட்ரீய ஜனதா தளத்தலைவர் லாலு பிரசாத் யாதவ் முரண்டு பிடித்து வருகிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில்அர்ஜூன் சிங், ஆர்.கே. தவான் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இடதுசாரிகள், மதிமுக, சமாஜ்வாடி கட்சி ஆகியவை அமைச்சரவையில் சேரப் போவதில்லை எனஅறிவித்துவிட்டன.
அமைச்சரவையில் சேர திமுக ஒப்புக் கொண்டுவிட்டது. இந்தமுறை அமைச்சரவையில்இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தயாநிதிமாறனை மனதில் வைத்தே அவர் இவ்வாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது.
திமுகவுக்கு இரு கேபினட் பதவிகளும், இரு இணையமைச்சர் பதவிகளும் கிடைக்கலாம்.டி.ஆர்.பாலு, ராசாவின் பெயர்கள் கேபினட் பதவிகளுக்கும் இணையமைச்சர் பதவிகளுக்கு தயாநிதிமாறன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பழனிமாணிக்கம் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
பா.ம.கவில் அக் கட்சியின் நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணி, தன்ராஜ் ஆகியோருக்கு பதவிகள்தரப்படலாம் என்று தெரிகிறது.
வாஜ்பாய்-அத்வானி வாழ்த்து
இந் நிலையில், பிரதமராகவுள்ள மன்மோகன் சிங்குக்கு பதவி விலகிச் செல்லும் பிரதமர் வாஜ்பாயும்துணைப் பிரதமர் அத்வானியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அத்வானி தனது வாழ்த்துக்களைத்தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களாக, சோனியா பிரதமராகக் கூடாது என சுஷ்மா சுவராஜ், உமா பாரதி ஆகியபா.ஜ.கவினர் பெரும் பிரச்சனையைக் கிளப்பிக் கொண்டிருந்தபோது, அத்வானி, பிரதமர் வாஜ்பாய்தரப்பில் பெரும் மெளனம் காக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவரை பிரதமராக விடாமல் தடுக்க நடந்த முயற்சிகளைஅமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த வாஜ்பாயின் மெளனம், கிரிமினல் மெளனம் என பார்வர்ட்பிளாக் கட்சி கருத்து தெரிவித்தது.
இந் நிலையில் இன்று வாஜ்பாயும் சிங்கை தொடர்பு கொண்டு தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications