ராஜிவ் நினைவு தினம்: நாளை சோனியா, சிங் ஸ்ரீபெரும்புதூர் வருகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ராஜிவ் காந்தியின் 13வது மறைவு தினத்தையொட்டி சோனியா காந்தியும் பிரதமர்பதவியேற்கவுள்ள மன்மோகன் சிங்கும் நாளை (21ம் தேதி) ஸ்ரீபெரும்புதூர் வருகின்றனர்.அவர்களுடன் ராகுல், பிரியங்காவும் வருகின்றனர்.
விமானம் மூலம் சென்னை வரும் அவர்கள், ஹெலிகாப்டரில் ஸ்ரீபெரும்புதூர் செல்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்தே மன்மோகன் சிங் தலைமையிலான புதிய காங்கிரஸ் கூட்டணிபதவியேற்கவுள்ளது.
1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்கு ராஜிவ் காந்தி பலியானதுநினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications