பிரதமராக மன்மோகன் சிங்குக்கு கலாம் கடிதம்
டெல்லி:
பிரதமராகப் பதவியேற்குமாறு டாக்டர் மன்மோகன் சிங்குக்கு குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்அழைப்பு விடுத்தார்.
நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் ராஷ்ட்ரபதி பவன் சென்று கலாமைசந்தித்தனர்.
அப்போது காங்கிரஸ் எம்.பிக்கள் சிங்கை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தற்கான கடிதத்தையும், கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தையும் கலாமிடம் சோனியா வழங்கினார்.
இதையடுத்து சிங்கை பதவியேற்குமாறு கேட்டுக் கொண்ட கலாம், அவரை பிரதமராக நியமித்தும் கடிதம் தந்தார்.மேலும் அமைச்சர்களின் பட்டியலைத் தருமாறும் கலாம் கேட்டார்.
விரைவில் பட்டியலுடன் வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டு சிங்கும், சோனியாவும் திரும்பினர்.
வெளியே வந்த இருவரும் ராஷ்ட்ரபதி மாளிகையில் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சிங், மக்கள்சோனியாவைத் தான் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தனர். ஆனால், அந்தப் பொறுப்பை என் வசம்ஒப்படைத்துவிட்டார் சோனியா.
மனித நேயத்துடனான பொருளாதார, சமூக சீர்திருத்தங்களுடன் என் அரசு செயல்படும். நாட்டின் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் உதவும் அரசாக இருக்கும்.
பதவியேற்கும் நாள் குறித்து விரைவில் குடியரசுத் தலைவரை மீண்டும் சந்திப்பேன் என்றார்.
உடனிருந்த சோனியா கூறுகையில், டாக்டர் மன்மோகன் சிங்கின் கைகளில் இந்தியா மிகப் பாதுகாப்பாக இருக்கும்என்றார்.
பெரும்பாலும் வரும் சனிக்கிழமை சிங் பதவியேற்கக் கூடும் என்று தெரிகிறது.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications