ஜெவை கொல்லப் போவதாக செய்தி பரப்பிய பெண் கைது
திருநெல்வேலி:
முதல்வர் ஜெயலலிதாவை கொல்ல சதி நடப்பதாக பொய்யான தகவலைக் கூறிய சட்டக் கல்லூரி மாணவியை திருநெல்வேலிபோலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரை அணுகிய சட்டக் கல்லூரி மாணவி சோபியா என்பவர், ஜெயலலிதாவைக்கொலை செய்ய சமாதானபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சுதாகர் என்பவர் சதி செய்வதாக கூறி ஒரு கடிதத்தையும் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில் ஜெயலலிதாவைக் கொலை செய்வதற்கான திட்டம் குறித்துக் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்துகாவல்துறையினரிடம் அந்தக் கடிதத்தை அதிமுக பிரமுகர் கொடுத்துள்ளார். போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அலெக்ஸ் சுதாகரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அந்தக் கடிதம் போலியானது என்று தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பெருமாள்புரத்தில் வசித்து வரும் சோபியாவை போலீஸார் கைது செய்தனர். போலியான தகவல் கொடுத்து சோபியாஏமாற்றியது தெரிய வந்தது.
இதற்குப் பின்னணியாக ஒரு தகவலை போலீஸார் கூறுகிறார்கள். அலெக்ஸ் சுதாகர் நடத்தும் கம்ப்யூட்டர் மையத்திற்கு அடிக்கடிசெல்வது சோபியாவின் வழக்கம். அப்போது அலெக்ஸ் வைத்திருந்த செல்போனை சோபியா திருடி விட்டதாகத் தெரிகிறது.
இதை அறிந்த அலெக்ஸ், சோபியாவை திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சோபியா, உன்னைப் பழி வாங்காமல் விடமாட்டேன் என்று கூறியுள்ளார். இதன் காரணமாகவே ஜெயலலிதா கொலை சதி என்ற பெயரில் அவர் நாடகமாடி அலெக்ஸை பழிதீர்க்க முயற்சித்ததாக போலீஸார் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications