சோனியாவுக்காக கோவை சிறையில் அல்-உம்மா கைதிகள் உண்ணாவிரதம்
கோவை:
சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மத்திய சிறையில் 18 அல்-உம்மா கைதிகள்நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான அல்-உம்மா கைதிகள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் முகம்மது முத்து, அஷ்ரப் அலி, சுபைர் நவாப் கான், ஹக்கீம், அப்பாஸ், சித்திக் அலி,
இப்ராகிம், சிக்கந்தர், அபுசலி, சையத் பக்ருதீன், நெளஷத், அலி, சம்சுதின், ரஹ்மான், வீடியோ ரபீக் உள்ளிட்ட 18கைதிகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சோனியா காந்திதான் பிரதமராக வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தியதாக பின்னர்அவர்கள் தெரிவித்தனர். உடல் நலக்குறைவு காரணமாக அமைப்பின் தலைவர் பாஷா உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முஸ்லிம் கைதிகளை விடுவிக்க கோரிக்கை:
தவறாக வழிநடத்திச் செல்லப்பட்டு பல ஆண்டுகளாகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆற்காடு இளவரசர் நவாப் முகமதுஅப்துல் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றதற்கு சிறுபான்மையின மக்களிடம் பெரும்ஆதரவு கிடைத்துள்ளது.
பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் மக்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டும். இதன் மூலம் அவர்களுடைய வறுமையை போக்க முடியும்.
தவறாக வழிநடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் தமிழகத்தில் 5 முதல் 10 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். தங்கள் தவறுகளை உணர்ந்திருக்கும் அவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதாநடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்து -முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்க்க முடியும் எனஅவர் கூறியுள்ளார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications