அமைச்சர்களாகப் போகும் தமிழக எம்.பிக்கள்
சென்னை:
டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு 6 இடங்களும் காங்கிரசுக்கு4ம் பா.ம.கவுக்கு 2 இடங்களும் தரப்படும் என்று என்று தெரிகிறது.
டாக்டர் மன்மோகன் சிங் நாளை (சனிக்கிழமை) பிரதமராகப் பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்கள்கொண்ட மத்திய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்.
மொத்தம் 60 பேர் அமைச்சரவையில் இடம் பெறவுள்ளனர். இதில் 30 இடங்கள் வரை காங்கிரசேவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் இன்று யார், யாருக்கு அமைச்சர் பதவிகள் தர வேண்டும் என்பது குறித்து திமுகதலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோருடன் மூத்த காங்கிரஸ் தலைவர்களானகமல்நாத், ஜனார்தன ரெட்டி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளில் அதிகபட்சமாக திமுகவுக்கு 6 அமைச்சர்கள் வரை கிடைக்கக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 2 கேபினட், 2 இணையமைச்சர்கள் என்று கூறப்பட்டது. இப்போது இந்தஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்கின்றனர்.
திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எச்.ராஜா ஆகியோருக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடியஅமைச்சர் பதவிகளும், வட சென்னை செ.குப்புசாமி, தஞ்சாவூர் பழனி மாணிக்கம், திருச்செங்கோடு சுப்புலட்சுமிஜெகதீசன், புதுக்கோட்டை ரகுபதி ஆகியோரில் மூவருக்கு இணையமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என திமுகவட்டாரங்கள் கூறுகின்றன.
பாலுவுக்கு பெட்ரோலியம் அல்லது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், தயாநிதிக்கு ரயில்வே அல்லது தரைவழிப்போக்குவரத்துத்துறையும் கேட்கப்பட்டுள்ளது. திமுகவுக்கு ஒதுக்கப்படும் இணையமைச்சர் பதவிகளில் ஒன்றுநிதித்துறையாக இருக்கலாம்.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ப.சிதம்பரம், ஆர்.பிரபு, மணிசங்கர அய்யர் ஆகியோரது பெயர்கள்அடிபடுகின்றன. நிதித்துறையை மன்மோகன் சிங்கே வைத்துக் கொள்ள விரும்புகிறார். இதனால் சிதம்பரத்துக்குவர்த்தகத்துறை கிடைக்கலாம்.
இவர்களைத் தவிர ஏற்கனவே அமைச்சராக இருந்துள்ள தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தனுக்கு மீண்டும் பதவிகள்கிடைக்க வாய்ப்புள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அமைச்சர் பதவிக்கு முயற்சித்து வருகிறார். அவருக்காககருணாநிதியும் சோனியாவிடம் பேசியுள்ளார்.
எப்படியும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 4 பதவி கிடைக்கக் கூடும் என்று தெரிகிறது.
பாமக சார்பில் 3 பேருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். ராமதாஸின் மகன்டாக்டர் அன்புமணி, அரக்கோணம் ஆர்.வேலு, புதுவை ராமதாஸ் ஆகியோரது பெயர்களை அக்கட்சிகாங்கிரஸிடம் கொடுத்துள்ளது. இதில் ஒருவருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படலாம்.
மதிமுக அமைச்சரவையில் இடம் பெறப் போவதில்லை என்று கூறி விட்டது. காங்கிரஸ் மேலிடம் மதிமுகவைபெரிதாகக் கண்டுகொள்ளவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications