திமுக மத்திய அமைச்சர்களின் பயோ-டேட்டா
தயாநிதி மாறன்
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் இளைய மகனான தயாநிதி மாறனுக்கு, தந்தையின் மறைவுக்குமுன்பே அரசியலில் ஆர்வம் இருந்ததுண்டு. மாறனின் மறைவுக்குப் பிறகு தாத்தா கருணாநிதியின் கரம் பற்றிஅரசியலில் முழுமையாக இறங்கிவிட்டார்.
முரசொலி மாறன் பல முறை போட்டியிட்டு வென்ற மத்திய சென்னை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டுவெற்றி பெற்று, உடனே மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளார். வயது 37 தான்.
சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த தயாநிதி, லயோலா கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இங்கிலாந்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாகமேலாண்மை கல்வி பயின்றவர்.
படிப்புக்குப் பின்னர் குங்குமம் பத்திரிக்கை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார். அத்தோடு, சன்டிவி குழுமத்தின் கேபிள் நெட்வொர்க் பிரிவான சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்.சி.வி.) நிறுவனத்தின் தலைமைநிர்வாகியாகவும் இருந்து வந்தார்.
கடந்த பல தேர்தல்களில் திமுகவின் பிரச்சார படங்கள், தேர்தல் விளம்பரங்களைத் தயாரித்தவர்.தயாநிதி மாறனின் மனைவி இந்து பத்திரிக்கை குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்உள்ளனர்.
டி.ஆர்.பாலு
மீண்டும் ஒரு முறை மத்திய அமைச்சராகியுள்ளார் டி.ஆர்.பாலு. கருணாநிதியின் நிழல் என்று வர்ணிக்கப்படுபவர்.
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி அருகே உள்ள தளிக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர் பாலு. இவருக்கு 2மனைவிகள், 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
பி.எஸ்.சி. படித்துள்ள டி.ஆர்.பாலு, கடந்த 1957ம் ஆண்டு முதல் திமுகவின் தீவிரத் தொண்டர். 1986ம் ஆண்டுமுதல் 92ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பியாகவும், 1996, 98, 99 ஆகிய ஆண்டுகளில் மக்களவைஉறுப்பினராகவும் இருந்துள்ளார்.
1996ம் ஆண்டு வரை 98ம் ஆண்டு வரை பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக இருந்தார். பின்னர் 1999ம்ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல வகையிலும் நெருக்கடிகள் தந்தவர் என்பதால் அவரால் அதிகமாகவிமர்சிக்கப்பட்டவர்.
திமுக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 20 முறைக்கும் மேல் சிறை சென்றவர்.மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். திமுக தலைவர் கருணாநிதி 2001ம் ஆண்டு நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டபோது, அதை தடுக்க முயன்ற முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் போலீஸாரால் கடுமையாகநடத்தப்பட்டனர். பாலுவும் கைதாகி விடுதலை ஆனார்.
சென்னை ராணி மேரிக் கல்லூரி இடிபடாமல் தடுத்தவர் என்பவதால் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மனதில்இடம் பிடித்தவர்.
ஏ.ராஜா
பெரம்பலூர் தொகுதியில் 4வது முறையாக வெற்றி பெற்றுள்ள ஏ.ராஜா மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார்.
வாஜ்பாய் அரசில் முதலில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராகவும், பின்னர் சுகாதாரத் துறை இணைஅமைச்சராகவும் பணியாற்றினார்.
பி.எஸ்.சி, எம்.எல் படித்துள்ள ராஜா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில்இருந்து பின்னர் திமுகவில் இணைந்தவர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் சட்ட நகரில் எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில்கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளராக தற்போது உள்ளார்.
ராஜாவுக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.
சுப்புலட்சுமி ஜெகதீசன்
ஆசிரியையான சுப்புலட்சுமி ஜெகதீசன் 1980ம் ஆண்டு முதல் திமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். மாநிலஅமைச்சர் பதவியில் இருந்து அனுபவப்பட்ட சுப்புலட்சுமி முதல் முறையாக மத்திய அமைச்சர் பதவிக்குஉயர்ந்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சிலர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் சுப்புலட்சுமி ஜெகதீசனும் ஒருவர். மதுரை சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவரைப் பார்க்ககருணாநிதிக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. 9 மாத சிறைவாசத்திற்குப் பிறகு சுப்புலட்சுமி நிரபராதி எனதீர்ப்பளிக்கப்பட்டு அவர் விடுதலையானார்.
ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்து சுப்புலட்சுமி எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராக பதவிவகித்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் சமூக நலத்துறைஅமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
1992ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழனி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். தற்போதுதிருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சர் பதவியை அடைந்துள்ளார்.
பழனி மாணிக்கம்
தஞ்சாவூரைச் சேர்ந்த பழனி மாணிக்கம் திமுகவைச் சேர்ந்த முக்கிய எம்.பிக்களில் ஒருவர். விவசாயியான பழனிமாணிக்கம் 4-வது முறையாக தொடர்ந்து வென்று எம்.பி. ஆகியுள்ளார்.
படித்தது வழக்கறிஞருக்கு என்றாலும் பழனி மாணிக்கத்தின் முக்கியத் தொழில் விவசாயம்தான். அதிலும்தஞ்சையைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயிகளின் கஷ்டத்தை நேரில் அனுபவித்து, முழுமையாக அறிந்தவர்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கடந்த நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பியவர்.
பக்கா திமுககாரரான பழனி மாணிக்கம், மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் பல குழுக்களில் இடம்பெற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற இந்தியக் குழு மற்றும் சார்க் நாடுகளின் குழுக்களில்இடம்பெற்றுள்ளார்.
-எஸ்.ரகுபதி
ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக விளங்கிய புதுக்கோட்டை தொகுதி திமுக எம்.பி. ரகுபதி முதல்முறையாக எம்.பி.யாகி, எடுத்த எடுப்பிலேயே மத்திய அமைச்சராகவும் உயர்ந்துள்ளார்.
செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ரகுபதி, 1992ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை ஜெயலலிதா அமைச்சரவையில்இருந்தவர். ஜெயலலிதா ஆட்சி பறி போன பிறகு 2000ம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.
வழக்கறிஞரான ரகுபதி, 1973ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தன் மூலம் அரசியலில் நுழைந்தவர்.
வெங்கடபதி
வழக்கறிஞரான வெங்கடபதி எம்.பி. ஆவது இதுவே முதல் முறை. முதல் முயற்சியிலேயே மத்திய அமைச்சர்பதவிக்கு உயர்ந்துள்ளார்.
வெங்கடபதி 1962ம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து வருகிறார். திமுக சார்பில் நடந்த இந்தி எதிர்ப்புப்போராட்டம், இலங்கைத் தமிழர் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டு 10 முறைக்கும்மேல் சிறை சென்றுள்ளார்.
இடையில் திமுகவிலிருந்து விலகி மதிமுகவில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து விலகி மீண்டும் திமுகவுக்குத்திரும்பினார். இப்போது மத்திய அமைச்சராகியுள்ளார்.












Click it and Unblock the Notifications