பொடா ரத்து, காவிரி பிரச்சனைக்கு சுமூக தீர்வு- குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அறிவிப்பு
டெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை நடத்துவதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தில் பொடா சட்டம்வாபஸ் பெறப்படும், காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டு சோனியா காந்தி- மன்மோகன் சிங்தலைமையிலான குழு இந்த செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
பெருவாரியாக தவறாகவே பயன்படுத்தப்பட்ட பொடா சட்டம் வாபஸ் பெறப்படும். அதே நேரத்தில்தீவிரவாதத்துக்கு எதிரான பிற சட்டங்கள் கடுமையாக்கப்படும்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும். கல்விக்கு முக்கியத்துவம் தரதேசிய கமிஷன் அமைக்கப்படும்.
பள்ளி பாடங்களில் மதத்தை புகுத்தி அதை காவிமயமாக்கியது பா.ஜ.க. அரசு. அந்தப் பாடங்கள் எல்லாம்திருத்தப்படும்.
ராணுவத்தை நவீனமாக அதிக முக்கியத்துவம் தரப்படும்.
மதக் கலவரத்தைத் தூண்டுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். மதக் கலவர வழக்குகளை இனிமேல்மத்திய புலனாய்வு அமைப்புகள் தான் விசாரிக்கும். மதக் கலவர வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்உருவாக்கப்படும்.
சிறுபான்மையினரின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
பொருளாதார சீர்த்திருத்தங்கள் தொடரும். ஏழை, எளியவர்களுக்கும், மிகவும் வறுமையில் வாடுவோருக்கும்மட்டுமே அரசின் மானியங்கள் வழங்கப்படும்.
அயோத்தி பிரச்சனையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும். அதே நேரம்பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையைத் தீர்க்க முன் வந்தால் அதை அரசு வரவேற்கும், பேச்சுவார்த்தைக்கும்உதவும்.
காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும். பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க நடவடிக்கைஎடுக்கப்படும். நதிகள் இணைப்பு குறித்த சாத்தியக்கூறுகள் தீவிரமாக ஆராயப்படும்.
இவ்வாறு குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications