தயாநிதிக்கு ஐ.டி துறை; திமுகவுக்கு உள்துறை, சட்டத்துறை இணையமைச்சர் பதவிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மாலையில் பிரதமர் பதவியேற்கவுள்ள மன்மோகன் சிங்குடன் 60 அமைச்சர்களும்பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.

திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ராஜா ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாகப்பதவியேற்கவுள்ளனர்.

தயாநிதிக்கு இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் தகவல் தொடர்புத்துறை வழங்கப்படும் எனகாங்கிரஸ் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

பாலுவுக்கு தரைவழிப் போக்குவரத்துறையும் எச்.ராஜாவுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும்ஒதுக்கப்படுகிறது.

திமுகவுக்கு மேலும் 4 இணையமைச்சர் பதவிகளும் வழங்கப்படவுள்ளன. இதில் ரகுபதிக்குமுக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இணையமைச்சர் பதவியும், வேங்கடபதிக்கு சட்டத்துறைஇணைமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளது.

பழனி மாணிக்கத்துக்கு வருவாய்த்துறை இணையமைச்சர் பதவியும், சுப்புலட்சுமி ஜெகதீசனுக்குசமூக நலம்-மகளிர் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பதவியும் தரப்படவுள்ளது.

பா.ம.கவுக்கு ஒரு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சகமும், ஒரு இணையமைச்சர் பதவியும்தரப்படவுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணிக்கு நலத்துறை ஒதுக்கப்படவுளளது.எம்பிபிஎஸ் பயின்ற அவர் நலத்துறை கேபினட் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். இன்னொன்றுரயில்வேதுறை இணையமைச்சர் பதவியாக இருக்கும்.

காங்கிரஸ் பெருந்தலைகள்:

காங்கிரஸ் மூத்த தலைவர்களான பிரனாப் முகர்ஜி உள்துறை கேபினட் அமைச்சராகவும், நட்வர் சிங்வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.

பிரியரஞ்சன் தாஸ்முன்ஷிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை, குலாம்நபி ஆசாதுக்கு விமானப்போக்குவரத்துத்துறை, ஜெய்பால் ரெட்டிக்கு செய்தி-ஒளிபரப்புத்துறை அமைச்சகங்கள் தரப்படலாம்என்று தெரிகிறது.

நிதித்துறையை மன்மோகன் சிங்கே வைத்துக் கொள்ள இருக்கிறார்.

லாலு, பவாருக்கு முக்கிய இலாகா:

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ரயில்வேதுறை அல்லது பாதுகாப்புத்துறைவழங்கப்படலாம் என்று தெரிகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு விவசாயம் மற்றும் உணவுத்துறை ஒதுக்கப்படுகிறது.

லோக்ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ரயில்வே துறையைக் கேட்டு நச்சரித்தார். அந்தத்துறை வழங்கப்பட்டால் மட்டுமே பதவியேற்பேன் என்று நிபந்தனை விதித்தார். இதையடுத்துஅவரை இன்று காலை முதல் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மூலம் சமாதானப்படுத்தும் முயற்சியில்காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது.

கடைசியில் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு 20 நிமிடங்களே இருந்த நிலையில் அமைச்சராக அவர் ஒப்புக்கொண்டார். பாஸ்வானுக்கு உரத்துறை வழங்கப்படும் என்று தெரிகிறது.

கர்நாடகம், ஆந்திராவுக்கு இணையாக தமிழகத்தை சாப்ட்வேர் துறையில் முன்னெடுத்துச் செல்லும்வகையில் தயாநிதிக்கு இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையை கருணாநிதி கேட்டு வாங்கியதாகத்தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+