அதிமுகவிடம் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிட வேண்டும்: திருநாவுக்கரசர்
கோவை:
வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என அக் கட்சியின் தலைவர்களில்ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சமீப காலமாக பா.ஜ.கவின் செயல்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்திருநாவுக்கரசர்.
கூட்டணி குறித்து தேர்தல் முடிந்த பின்னரே வாய் திறப்பேன் என்று கூறிய திருநாவுக்கரசர் இப்போதுசொன்ன மாதிரியே பேச ஆரம்பித்துள்ளார்.
அதிமுகவுடன் தனது விருப்பத்தையும் மீறி கூட்டணி வைத்தது, முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பணிந்து தன்னை கட்சியில் ஓரம் கட்டியது என பா.ஜ.க. மாநிலத் தலைவர்கள் நடந்து கொண்ட விதம்குறித்து தாக்கி வருகிறார்.
அதிமுக கூட்டணியை விட்டு பா.ஜ.க விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். இந்தக்கூட்டணி தொடர்ந்தால் கட்சியை விட்டு விலகவும் அவர் தயாராகி வருகிறார்.
தானாகவே விலக விரும்பாத அவர், தன்னை கட்சியே நீக்கட்டும் என்று விரும்புவதாக அவரதுஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,
தேர்தலில் வாஜ்பாய்க்கு எதிராக அலை வீசவில்லை. மாநில அரசுக்கு எதிராகத் தான் மக்கள்வாக்களித்துள்ளார்கள்.
சிறப்பான நிதியமைச்சராக செயல்பட்ட மன்மோகன் சிங் பிரதமரானது வரவேற்புக்குரியது. பா.ஜ.க.ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை சிங் தொடர வேண்டும்.
நதி நீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
பொடா சட்டத்தால் அரசியல் கட்சியினர், பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனாலபொடாவை வாபஸ் பெறலாம்.
தமிழக அரசின் மோசமான செயல்பாடுகள் காரணமாகவே பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடவேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications