இலாகா ஒதுக்கீட்டில் கருணாநிதி அதிருப்தி: திமுக அமைச்சர்கள் பதவியேற்கவில்லை
சென்னை:
திமுகவுக்கு உறுதியளிக்கப்பட்ட இலாகாக்கள் ஒதுக்கப்படாததால், அக் கட்சியைச் சேர்ந்தஅமைச்சர்கள் இன்று தங்களது பொறுப்புக்களை ஏற்கவில்லை. இந் நிலையில் திமுகவின் உயர்மட்டக் கூட்டத்தை கருணாநிதி நாளை கூட்டியுள்ளார்.
இதையடுத்து கருணாநிதியுடன் பேசி இலாகா பிரச்சினை தீர்க்கப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
டி.ஆர்.பாலுவுக்கு நெடுஞ்சாலைத் துறையோடு கப்பல் போக்குவரத்துத் துறையும் ஒதுக்காததால்கருணாநிதி அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக இந்த இரு துறைகளும் ஒரேஅமைச்சர் வசம் தான் இருக்கும்.
ஆனால், இம்முறை இந்த இரு துறைகளையும் பிரித்து நெடுஞ்சாலைத்துறை பாலுவிடமும், கப்பல்போக்குவரத்துத்துறை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவிடமும்தரப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதி அதிருப்தியடைந்துள்ளார்.
அதே போல திமுக இணையமைச்சர்களில் ஒருவருக்கு வருவாய்த்துறை ஒதுக்கப்படும் என்றுஉறுதிமொழி அளிக்கப்பட்டது. அதுவும் தரப்படவில்லை.
நேற்றிரவு 11.30 மணிக்குத்தான் அனைத்து அமைச்சர்களுக்கான இலாகாக்கள் டெல்லியில்ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து இரவோடு இரவாக 12.30 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியிடம் இருந்து ஒருஅறிக்கை வெளியானது.
அதில், திமுகவுக்கு ஒதுக்கப்படுவதாகக் கூறிய சில இலாகாக்களை காங்கிரஸ் ஒதுக்கவில்லை. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஜனார்தன ரெட்டி எங்களிடம் தந்த உறுதிமொழிக்கும்,ஒதுக்கப்பட்டுள்ள சில இலாகாக்களுக்கும் சம்பந்தமே இல்லை.
இந்த தவறு சரி செய்யப்படும் வரை, திமுக அமைச்சர்கள் யாரும் தங்களுக்குத் தரப்பட்ட பதவிப்பொறுப்புகளை ஏற்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.
இந் நிலையில் இன்று பெரும்பாலான அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுக்குச்சென்று பதவியேற்ற நிலையில், திமுக அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை.
நாங்கள் யாரும் இன்று பதவியேற்கவில்லை என டி.ஆர். பாலு டெல்லியில் இன்று காலைசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதலில் அமைச்சர் பதவியேற்க மாட்டோம் என்று சொல்லி வந்த கருணாநிதி, பின்னர் சோனியாகேட்டுக் கொண்டதால் சேருவதாக அறிவித்தார். இந் நிலையில் இலாகா ஒதுக்கீடு விஷயத்தில்கோபமடைந்துள்ளார்.
மேலும் தென் தமிழகத்துக்கு மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை என்றும், அதற்கும்சில திமுக அமைச்சர்களை நியமித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
இதன்மூலம் திமுகவுக்கு 7 அமைச்சர் பதவிகள் கிடைத்தும் அதுபோதாது என கருணாநிதி கருத்துதெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சமாதான முயற்சி:
இந் நிலையில் வர்த்தக அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட கமல்நாத் நிருபர்களிடம் பேசுகையில், கருணாநிதி பெரியஅரசியல் தலைவர். அவருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இலாகா ஒதுக்கீடு பிரச்சினை குறித்து அவருடன் பேசி தீர்வுகாணப்படும் என்றார்.
இந் நிலையில் கருணாநிதி நாளை திமுகவின் உயர் மட்டக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதில் சிலஅவசரமான, முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக பொதுச் செயலாளர் அன்பழகன்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications