சோனியாவுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி:
சோனியா காந்தியை பிரதமராக்கக் கூடாது என ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி தாக்கல்செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதை 5 நபர் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில்நிர்பந்திக்கப்பட்டதையடுத்து, ரூ. 30,000 அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
லக்னெளவைச் சேர்ந்த அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த கோடை கால நீதிபதி ருமா பால் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், சோனியாபிரதமராக பதவியேற்க மறுத்துவிட்டதால் இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லைஎன்று கூறி தள்ளுபடி செய்தார்.
இதை ஏற்க மறுத்த அசோக் பாண்டே, சோனியா விவகாரம் இன்னும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த மனுவை 5 நபர் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்கவேண்டும் என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதிகள், சோனியாவுக்கு எதிராக ஹரி சங்கர் ஜெயின் தாக்கல் செய்தமனுவை விசாரித்தபோதே தீர்க்கப்பட்டுவிட்டது. மக்களவைக்கு சோனியா போட்டியிடக் கூடாதுஎன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்துள்ளது. இதனால் இதில் மேற்கொண்டு விசாரிக்கஏதுமில்லை என்றனர்.
ஆனாலும் தொடர்ந்து அசோக் பாண்டே, 5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என மீண்டும்மீண்டும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார். மேலும் சரியாக விசாரிக்காலேயே மனுக்களைதள்ளுபடி செய்வது நீதிமன்றங்களின் வழக்கமாகிவிட்டது என்றார்.
இதனால் கடுப்பான நீதிபதி ருமா பால், அவருக்கு ரூ. 20,000 அபராதம் விதித்தார்.
இதன் பிறகும் கோர்ட் ஹாலைவிட்டு வழக்கறிஞர் பாண்டே வெளியேறாததால் அபராதத்தொகையை ரூ. 25,000 ஆகவும் பின்னர், அதை . 30,000 ஆகவும் நீதிபதிகள் உயர்த்தினர்.அப்போதும் பாண்டே தொடர்நது நீதிபதிகளை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, உங்களை கைது செய்ய உத்தரவிடுவோம் என நீதிபதிகள் எச்சரித்த பின்னர் பாண்டேமன்னிப்பு கேட்டுவிட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து அவருக்குவிதிக்கப்பட்ட அபராதத்தை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications