புறக்கணிக்கப்பட்ட தென் மாவட்டங்கள்
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களில் ப.சிதம்பரத்தைத் தவிர தென் மாவட்டத்தைச் சேர்ந்த வேறுயாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு 12 பேர் மத்திய அமைச்சர்கள் ஆகியுள்ளனர். தமிழகத்தின்வடக்கு, மத்தியப் பகுதி மற்றும் மேற்குப் பகுதி மாவட்டங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.ஆனால் தென் மாவட்டங்கள் சுத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.
ப.சிதம்பரம் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக உள்ளார். அவரும் கூட கிழக்குப் பகுதிமாவட்டத்தில்தான் வருகிறார். மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல்உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் (இருவரும் சென்னை), அன்புமணி (திண்டிவனம்), ஆர்.வேலு (அரக்கோணம்),வேங்கடபதி (கடலூர்) ஆகிய 5 பேரும் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல, இளங்கோவன் (கோபிச்செட்டிப்பாளையம்), சுப்புலட்சுமி ஜெகதீசன் (திருச்செங்கோடு) ஆகியஇருவரும் மேற்குப் பகுதி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
ரகுபதி, ராஜா, பழனிமாணிக்கம் ஆகியோர் மத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ப.சிதம்பரம் கிழக்குப் பகுதியைச்சேர்ந்தவர். தென் தமிழகம் மட்டும்தான் மத்திய அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல்புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநதி இதை சூசகமாகக் குறிப்பிட்டார்.கூடுதலாக 2 அமைச்சர் பதவி கிடைத்திருந்தால் நலமாக இருந்திருக்கும், நாங்களும் அதை எதிர்பார்த்தோம்,கிடைத்திருந்தால் அனைத்துப் பகுதிகளுக்கும் போதிய பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும் என்றார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications