தமிழகத்தில் 6 ராஜ்யசபா சீட்களுக்கு ஜூன் 21ல் தேர்தல்
டெல்லி:
தமிழகத்தில் காலியாகப் போகும் 6 ராஜ்யசபா எம்.பி. தொகுதிகளுக்கு வரும் ஜூன் மாதம் 21ம் தேதி தேர்தல்நடைபெறவுள்ளது.
தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் வாக்களித்து இந்த எம்.பிக்களைத் தேர்வு செய்வர்.
இப்போது திமுகவைச் சேர்ந்த அக்னிராஜ், காதர், சங்கரலிங்கம், சிவசுப்பிரமணி, விடுதலை விரும்பி, அதிமுகவைச்சேர்ந்த மைத்ரேயன் ஆகியோர் ராஜ்யசபா எம்.பிக்களாக உள்ளனர். இவர்களின் பதவிக் காலம் வரும் ஜூன் 29ம்தேதியுடன் முடிவடைகிறது.
இப்போது சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தின்படி அதிமுகவுக்கு 4 எம்பிக்களும் திமுக, காங்கிரஸ், பா.ம.க.கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கும். இதில் ஒன்றை பா.ம.கவுக்கு விட்டுத் தர திமுக உறுதியளித்துள்ளது.
மத்திய அமைச்சராகிவிட்ட அன்புமணியை இதன் மூலம் எம்.பியாக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இன்னொருஇடத்தில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிகிறது.
இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 4ம் தேதி வெளியிடப்படுகிறது. 11ம் தேதி வேட்பு மனுதாக்கல் முடிகிறது,12ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும், 14ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். போட்டிஇருந்தால் 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications