இலாகா குழப்பம்: ஜனார்தன ரெட்டியே காரணம்
டெல்லி:
திமுக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் ஏற்பட்ட்ட குளறுபடிகளுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்ஜனார்தன ரெட்டிதான் காரணம் என்று கூறப்படுகிறது.
திமுகவைச் சேர்ந்த 7 அமைச்சர்களில் 3 பேருக்கு தருவதாக ஒத்துக் கொண்ட இலாகாக்களை காங்கிரஸ் தரவில்லைஎன்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். கேட்டது கிடைக்கும் வரை திமுக அமைச்சர்கள்பதவியேற்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
திமுகவுக்கு ஒதுக்கப்பட இருந்த இலாகாக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜனார்தன ரெட்டி தன்னிடம் தந்தகடிதத்தையும் காட்டியுள்ளார் கருணாநிதி.
ஆனால் அப்படி எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி எதையும் கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.உறுதிமொழி தருவதற்கு ஜனார்தன ரெட்டிக்கு அதிகாரமே தரப்படவில்லை என தமிழக காங்கிரஸ் விவகாரங்களைகவனித்து வரும் அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.
அமைச்சர்கள், இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாக சோனியா காந்தியின் சார்பில் கருணாநிதியிடம், பேசி இறுதிமுடிவெடுத்தவர் ரெட்டிதான்.
அப்போது தன்னிச்சையாக அவர் கருணாநிதியிடம் கடிதம் தந்ததாகத் தெரிகிறது. இதை நம்பிய கருணாநிதியும்இலாகாக்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
ஆனால், சோனியாவிடமும், மன்மோகன் சிங்கிடமும் தான் கடிதம் கொடுத்தது குறித்தோ, இலாகா ஒதுக்கீடு குறித்துஉறுதிமொழி தந்தது குறித்தோ தகவல் தராமல் விட்டுவிட்டதாகத் தெரிகிறது.
ரெட்டியின் தேவையில்லாத வேலையினால்தான் தற்போது குழப்பம் ஏற்பட்டு விட்டதாக காங்கிரஸ் கூறுகிறது.
இதே போல மேலும் சில கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா விஷயத்தில் மன வருத்தம்தெரிவித்துள்ளன. இதனால் மொத்தமாத இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிரதமர் மன்மோகன் சிங்திட்டமிட்டுள்ளார்.
பிரச்சனை சரியாவதற்கு சில நாட்களாகலாம்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications