மதுரை மாணவியின் கணவர் கொலை: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவி ரோஸ்லின் செல்வ அரசியின் காதல் கணவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்குதொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் ரோஸ்லின் செல்வ அரசி. இவர் பிரதாப் என்பரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி பிரதாப்பை திருமணம் செய்து கொண்டு நேபாளம் சென்று விட்டார்.அங்கு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார் ரோஸ்லின்.
இந் நிலையில் நேபாளம் சென்ற ரோஸ்லினின் தந்தை ராதாகிருஷ்ணன், பிரதாப்புக்கு வேலை வாங்கித் தருவதாககூறி இந்தியாவுக்கு அழைத்து வந்தார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை.
இதையடுத்து பிரதாப் சென்னை சேலையூர் வந்து தனது அண்ணனுடன் தங்கினார்.
இந் நிலையில் பிரதாப் திடீரென காணாமல் போனார். அவரை தனது தந்தைதான் கடத்திக் கொலை செய்திருக்கவேண்டும் என்று ரோஸ்லின் புகார் கொடுத்தார். போலீசார் இந்த வழக்கை சரியாக விசாரிக்காததால் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்.
இதற்கிடையே சென்னை அருகே படப்பை என்ற இடத்தில் பிரதாப்பின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றுமாறு கோரி ரோஸ்லின் உயர் நீதிமன்றத்தில்மீண்டும் மனு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி பாலசுப்ரமணியன், தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு வாரத்திற்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மருமகனைக் கடத்திச் சென்று கொலை செய்த ரோஸ்லினின் தந்தை ராதாகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications