பி.எஸ்.என்.எல். தனியார் மயமாகாது: தயாநிதி
டெல்லி:
பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என மத்தியதகவல் தொடர்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்ற தயாநிதி மாறன்தெரிவித்தார்.
அமைச்சராக இன்று காலை பொறுப்பேற்றவுடன் இரு துறைகளின் உயரதிகாரிகளுடன் தயாநிதி ஆலோசனைநடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனியார்மயமாக்கப்பட வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில்இரு நிறுவனங்களும் இருந்தன. தற்போது இவை லாபகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதால் இருநிறுவனங்களும் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
எக் காரணம் கொண்டும் லாபகரமான அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்க மாட்டோம். அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியாருடன் போட்டியிட்டு வெல்ல வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளும்செய்யப்படும். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சேவையில் மேலும் பல வசதிகள் செய்து தரப்படும்.
சாப்ட்வேர் தொழிலின் வளர்ச்சிக்கு அரசு முழு உதவிகள் செய்யும். இந்தியாவை அமெரிக்கா, ஐரோப்பியநிறுவனங்களின் அவுட் சோர்சிங் தலைமையகமாக மாற்றுவோம்.
நாட்டில் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்டர்நெட் வசதி நாட்டின்மூலை, முடுக்குகளுக்கும் ஊடுருவும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கித் தரப்படும்.
தனியார் செல்போன் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் பி.எஸ்.என்.எல்லுக்கு அதி நவீனதொழில்நுட்ப வசதிகள் கிடைக்கச் செய்வேன் என்றார் தயாநிதி மாறன்.
டி.ஆர். பாலு பேட்டி:
இதேபோல, தரை வழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆர்.பாலுசெய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குஉறுதுணையாக தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்தப்படும்.
சேது சமுத்திரம் திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். எனவே அத் திட்டத்தைவிரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications