ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை நீக்கும் பணி தொடங்கியது
சென்னை:
ரேசன் அட்டைகளில் அச்சிடப்பட்ட எச் முத்திரையை நீக்கும் பணி தொடங்கியது. ஜூன் மாதம் 30ம் தேதி வரைஎச் முத்திரையை பொது மக்கள் நீக்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் கிடைத்த பெரும் அடியைத் தொடர்ந்து, பல சலுகைப் பறிப்புகளை தமிழக அரசு ரத்துசெய்யது. அதில் முக்கியமானது குடும்ப அட்டைகளில் பதிக்கப்பட்ட எச் முத்திரை நீக்கம்.
ரூ. 5,000 மாத வருமானம் உள்ள குடும்பத்தினரின் ரேசன் அட்டைகளில் இந்த முத்திரையைக் குத்திய அரசு,அவர்களுக்கு ரேசனில் எந்தப் பொருளும் தரப்படாது என்று அறிவித்தது.
இப்போது இந்த முத்திரையை நீக்கவும், ரேசன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும், அனைத்துப் பொருள்களையும்வழங்கவும் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து எச் முத்திரை நீக்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், பிறமாவட்டங்களில் வட்டார வழங்கல் அலுவலகங்களிலும் எச் முத்திரை நீக்கும் பணி நடக்கிறது.
பொது மக்கள் இங்கு சென்று ரேசன் கார்டுகளைக் கொடுத்தால் முத்திரை நீக்கப்படும். ஜூன் மாதம் 30ம் தேதி வரைஇந்தப் பணி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. எல்லா வேலை நாட்களிலும் இந்தப் பணி நடக்கும்.
ஜூலை 1ம் தேதி முதல் வழக்கம் போல பொருட்களை பொது மக்கள் ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications