மக்களவை சபாநாயகராகிறார் கம்யூ. தலைவர் சாட்டர்ஜி
டெல்லி:
மக்களவை சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிபதவியேற்கவுள்ளார்.
தங்களது ஆட்சிக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தர முன் வந்ததால், சபாநாயகர்பதவியை மார்க்சிஸ்ட்டுக்கு விட்டுத் தர காங்கிரஸ் முன் வந்தது.
கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்தப் பதவியைஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளனர். சோம்நாத் சாட்டர்ஜியை அந்தப் பதவிக்குபரிந்துரைத்துள்ளனர்.
பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா:
இதற்கிடையே, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா தனது பதவியைராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து அந்தப் பதவியில் முன்னாள் வெளியுறவுத்துறைச்செயலாளர் ஜே.என்.தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாயின் ஆட்சியில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார் மிஸ்ரா. ஆட்சி மாற்றத்தையடுத்துதனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து அந்தப் பதவியில் தீட்சித்நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு அமைதி காக்கும் படையை அனுப்பச் செய்தது தீக்ஷித்தான் என்பது நினைவுகூறத்தக்கது. பாகிஸ்தான், இலங்கையில் இந்தியத் தூதராகவும்பணியாற்றியுள்ளார் தீக்ஷித்.
சோலி சொராப்ஜி விலகல்:
அதே போல மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்து சோலி சொராப்ஜியும் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
காஷ்மீரில் பல்வேறு அமைப்புகளுடன் அமைதிப் பேச்சு நடத்தி வந்த மத்திய அரசின சிறப்புப்பிரதிநிதி என்.என்.வோராவும் ஆட்சி மாற்றத்தையடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஆனால், அவரது ராஜினாமாவை மன்மோகன் சிங் இதுவரை ஏற்கவில்லை.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications