ராஜ்யசபா எம்.பியாகும் தினகரன், பதர் சயீத்
சென்னை:
அதிமுகவின் சார்பில் தினகரன் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு அடுத்தபடியாக அசைக்க முடியாத சக்தியாகஇருப்பவர் தினகரன். கடந்த மூன்று முறையாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றுவந்தார்.
ஆனால், அவரை இம்முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜே.எம்.ஆரூண் தோற்கடித்துவிட்டார்.ஏகப்பட்ட கோடிகளை செலவழித்தும் வெற்றியைப் பெற முடியவில்லை.
டெல்லியில் தினகரன் மூலமாகத் தான் பா.ஜ.க. அரசிடம் காய் நகர்த்தி வந்தார் ஜெயலலிதா.இப்போது பா.ஜ.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுக அமைச்சர்களால் எழும் சவால்களைசமாளிக்க டெல்லியில் தினகரன் இருப்பது நல்லது என முதல்வர் கருதுவதாகத் தெரிகிறது.
இதனால் தினகரன் ராஜ்யசபா எம்.பியாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதே போல நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்ட திண்டுக்கல்சீனிவாசனும் ராஜ்யசபாவுக்குத் தேர்வாவார் என்று தெரிகிறது.
சசிகலாவுக்கு நெருக்கமான சீனிவாசனுக்கு சீட் கிடைக்காதது அதிமுக தொண்டர்களையேஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இம் முறை அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க சசிகலா தீவிரமாகஇருப்பதால் அவர் எம்.பியாவது நிச்சயமாகியுள்ளது.
தென் சென்னையில் போட்டியிட்டுத் தோற்ற தனது பள்ளித் தோழியான பதர் சயீதையும் ராஜ்யசபாஎம்.பியாக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக போயஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இன்னொரு சீட் கிருஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தரப்படலாம் என்றுகூறப்படுகிறது.
இப்போது மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தாகிவிட்டாலும், தேர்தலின்போது இச் சட்டத்தால்அதிமுகவிடம் இருந்து விலகி நின்ற கிருஸ்துவர்களையும், பண்ணையாரின் கொலையால் விலகிச்சென்ற நாடார் சமூகத்தினரையும் திருப்திப்படுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications