எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: 77.74 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி- தஞ்சை மாணவி முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பத்தாம் வகுப்புத் தேர்வில் 77.74 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போலமாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 74 சதவீதமும், மாணவிகள் 80 சதவீதமும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தஞ்சை மாணவி காயத்ரி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.மெட்ரிகுலேசன் தேர்வில் மதுரை டி.வி.எஸ். லட்சுமி மேல்நிலைப் பள்ளி மாநிலத்தின் முதல் மூன்று இடங்களைப்பிடித்துள்ளது.

பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி, மெரிட்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள்இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வுகள் துறை இயக்குநர் பழனிவேலு முடிவுகளை வெளியிட்டார்.

மொத்தம் 7.79 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இதில் 77.74 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.08 சதவீதம் குறைவாகும்.

வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி காயத்ரி 500க்கு 495 மதிப்பெண்கள்பெற்று மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். கணக்கு, அறிவியல், சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறுவாங்கியிருக்கிறார் காயத்ரி.

493 மதிப்பெண்கள் பெற்று 7 பேர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்களது பெயர் விவரம்:

ஜாஸ்மீன் பிரியா- புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி(தஞ்சை), ஜனனி- நிர்மலா மேல்நிலைப் பள்ளி (மதுரை),மாலினி மற்றும் மீனாள்- எஸ்.வி. இந்து மேல் நிலைப் பள்ளி (திருச்சி), சத்யா- ஹோரிகிராஸ் மேல் நிலைப்பள்ளி(திருச்சி), வெங்கடேஷ்- பிஷப் ஹூபர் மேல் நிலைப்பள்ளி (திருச்சி), ராமச்சந்திரன்- புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி (திருச்சி).

492 மதிப்பெண்களுடன் 4 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களது பெயர் விவரம்:

பிரவீணா குருசாந்தி-எல்.எப்.கே. மேல் நிலைப்பள்ளி ( நாகர்கோவில்), சுந்தர்ராஜ், புனித ஜான் மேல்நிலைப்பள்ளி(பாளையங்கோட்டை), ஜெகதீசன்- செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி (துறையூர்), கவிதா-புனித ஆனிஸ் மேல்நிலைப்பள்ளி (கூடலூர்)

கணக்குப் பாடத்தில் மொத்தம் 17,075 பேரும், அறிவியலில் 1,309 பேரும், சமூக அறிவியலில் 526 பேரும்நூற்றுக்கு நூறு வாங்கியுள்ளனர்.

தமிழில் முதலிடம்:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் எழில் சிவம் தமிழ் பாடத்தில்100க்கு 99 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதே பள்ளியின் மாணவர் அஸ்வின் 98 மதிப்பெண்கள் வாங்கி இரண்டாம் இடம் பிடித்துளளார். பிரீதிராம் என்ற மாணவியும் 98மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மெட்ரிக்: மதுரை மாணவிகள் சாதனை

மெட்ரிகுலேஷன் தேர்வில் மதுரை டி.வி.எஸ். லட்சுமி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளான உத்ரா(1100க்கு 1068), சுவர்ணா (1067), ருக்மா கிருத்திகா (1064)ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதனைபடைத்துள்ளனர். ஒரே பள்ளி மாநிலத்தின் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது.

மேலும் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் சரவண்குமார், சிவகாசி மாணவர் விக்னேசும் 1064மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளனர்.

மெட்ரிக் தேர்விலும் மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வில் சென்னை பரங்கிமலை, கோவை, திருச்சி மாணவர்கள் முதல் 3 இடங்களைப்பிடித்துள்ளனர்.

மறுகூட்டல்:

நன்றாகத் தேர்வு எழுதியும் மதிப்பெண் குறைந்துள்ளதாக சந்தேகப்படும் மாணவ, மாணவிகள்விடைத்தாள்களின் மறு கூட்டலுக்கு வரும் 31 முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட கல்வி அலுவலகம், மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குனர் அலுவலகங்களில்விண்ணப்பங்களை உரிய கட்டணம் செலுத்து சமர்பிக்கலாம்.

உடனடி துணைத் தேர்வுகள்:

தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் ஓராண்டு வரை காத்திருக்காமல், உடனடியாக மறு தேர்வுஎழுதி, வென்று உயர் கல்வியைத் தொடரலாம்.

3 பாடங்களில் மட்டும் தோல்விடைந்த மாணவ, மாணவிகளுக்கு இது பொருந்தும். இந்த் தேர்வுகள்ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் 11ம்தேதி வரை வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+