ராஜீவ் கொலை விவகாரம்: திமுக- காங் கசமுசா
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து மறு விசாரணை கோரவில்லை என்று மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மறுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கவேண்டும் என்றும், ராஜீவ் கொலை பற்றி மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அர்ஜூன் சிங் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் சந்தித்தார்.சந்தித்துவிட்டுத் திரும்பும்போது நிருபர்களிடம் பேசுகையில், எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று ஏற்கனவேநிரூபணம் ஆகிவிட்டது. எனவே இது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
பல்நோக்கு கண்காணிப்பு குழு பதவி நீடிப்பதால் திமுகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை நாங்கள்எதிர்க்கவில்லை. நாங்கள் பரிசுத்தமானவர்கள் என்றார்.
இந் நிலையில், ராஜீவ் கொலை குறித்து மறு விசாரணை கோரவில்லை என்று அர்ஜூன் சிங் விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ராஜீவ் கொலையில் மறு விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியதாக வந்த தகவல் உண்மையானதுஅல்ல. பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை நீடிப்பது பற்றி பிரதமரிடம் கருத்து கேட்டேன்.ஆனால் பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டதாக சில பத்திரிக்கைகள் தவறாக எழுதி விட்டன.
இந்த கொலையில் திமுகவுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்று ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில்கூறப்பட்டுள்ளது. திமுகவுக்கு தொடர்பு இல்லை என்று தெரிந்த பின்புதான் கூட்டணி அமைத்தோம் என்றுகூறினார்.
இதற்கிடையே,- ராஜீவ் கொலையாளிக்கு தான் அடைக்கலம் கொடுத்ததாக பொய் பிரசாரம் செய்யப்பட்டுவருவதாக மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பொய்யாகபுனையப்பட்ட வழக்கில் தடா சட்டத்தில் என்னை கைது செய்தனர். அரசியல்ரீதியாக பழி வாங்கும் நோக்கில் என்பெயரை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சேர்த்தார்.
இதில் உச்ச நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. பின்னர் தடா நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தற்காக என்னைக் கைது செய்தனர் என்று,எனது புகழை கெடுப்பதற்காக தவறாக அப்படி பிரசாரம் செய்யப்படுகிறது என்றார் சுப்புலட்சுமி.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications