நாடாளுமன்ற திமுக எம்.பிக்கள் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு
சென்னை:
நாடாளுமன்ற (மக்களவை, மாநிலங்களைவை) திமுக எம்.பிக்களின் தலைவராக டி.ஆர்.பாலு மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
மக்களவை திமுக எம்பிக்கள் தலைவராக செ.குப்புசாமியும், மாநிலங்களவை எம்.பிக்கள் தலைவராகசண்முகசுந்தரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இரு அவைகளிலும் சேர்த்து திமுகவுக்கு 22 எம்.பிக்கள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
இன்று அண்ணா அறிவாலய திமுக எம்.பிக்களின் கூட்டம் அக் கட்சியின் தலைவர் கருணாநிதியின் முன்னிலையில்நடந்தது.
அதில் பாலு, குப்புசாமி, சண்முகசுந்தரம் ஆகியோர் நாடாளுமன்ற கட்சி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.கொறடாவாக ஆர்.கிருஷ்ணசாமியும், துணை கொறடாவாக விஜயனும் தேர்வு செய்யப்பட்டனர்.
செயலாளராக விடுதலை விரும்பியும், பொருளாளராக சரத்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்திய அமைச்சராக்கப்பட்ட தயாநிதி மாறனுக்கு கட்சிப் பொறுப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில்ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டங்கள் அனைத்திலும் திமுகவின் சார்பில் தயாநிதி மாறனே கலந்துகொள்வார் என்றும் திமுகவின் குரலாக அவர் இருப்பார் என்றும் அக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அமைச்சர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு:
மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று சென்னை வந்த திமுகவைச் சேர்ந்த 7பேருக்கும் விமான நிலையத்தில் மிகப் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா, சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர்இன்று சென்னை வந்தனர். அவர்களுக்கு திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் தலையிைல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
விமான நிலைய வளாகத்தில் போடப்பட்டிருந்த சிறப்பு மேடையில் ஏறி 7 அமைச்சர்களும் தொண்டர்களின்உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் 7 பேரும் அண்ணா அறிவாலயம் சென்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். அதன் பின்னர்அண்ணா சமாதி, பெரியார் நினைவிடம், காமராஜர் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் முரசொலிமாறன் வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications