சோனியாவை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை: கருணாநிதி
சென்னை:
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று செயல் திட்டத்தில் உறுதிமொழி தந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை வாழ்த்த செம்மொழியாகப் போகும் தமிழில் கூட வார்த்தைகள்இல்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் திமுக போராட்டம் நடத்தியது. அதில் பங்கேற்ற 1.5 லட்சம் திமுகவினர்சிறை சென்றனர்.
இதை ஆரோக்கியமற்ற அரசியல் என்று பாஜக தலைவர்கள் கேலி செய்து விமர்சித்தனர்.
ஆனால் நேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து வெளியிட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் திமுகவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும்அறிவித்துள்ளனர்.
இதற்காக அவர்களை வாழ்த்தலாம் என்றால் செம்மொழியாகப் போகும் தமிழில் கூட அதற்கு வார்த்தைகள்இல்லை.
இந்த அறிவிப்பு 40 இடங்களைத் தந்த வாக்காளப் பெருமக்களுக்கும், திமுக கூட்டணிக்கும் கிடைத்த மகத்தானவெற்றி.
சென்னையில் தான் முதன்முறையாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் மத்திய அரசுசெயல்படுத்தப் போகிறது. திமுகவின் கோரிக்கையை ஏற்று இதுவும் செயல் திட்டத்தில்சேர்க்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications