சோதனைகளை வென்ற கண்மணிகள்
சென்னை
வீட்டில் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் பத்தாம் வகுப்புத் தேர்வில் சில மாணவ, மாணவிகள் நல்லமதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
* ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மாணவி மாளவிகா. அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குண்டடிபட்டுஇரண்டு கைகளையும் இழந்தவர். சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஒரு தனியார் டுடோரியல் மையத்தில் தனித்தேர்வராக பத்தாம் வகுப்புப் படித்து தேர்வெழுதினார்.
இதில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்மாளவிகா. 500க்கு 483 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார் மாளவிகா.
எதிர்காலத்தில் கலெக்டராக வேண்டும் என்பதுதான் இந்த சாதனை மாணவியின் தாகம்.
* முறுக்கு விற்றுக் கொண்டே படிப்பிலும் பின்னி எடுத்துள்ளார் திருச்சி மாணவர் ராமச்சந்திரன். இவர் 500க்கு 493மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 2வது மாணவராக தேர்வு பெற்றுள்ளார்.
இவரது தாயார் விசாலாட்சி முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார்.மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள விசாலாட்சிமிகவும் சிரமப்பட்டுத்தான் தனது மகனை படிக்க வைத்து வருகிறார்.
தாயின் நிலையை உணர்ந்த ராமச்சந்திரனும் நன்றாக படித்து வந்தார். படிக்கும் நேரம் போக மற்ற சமயத்தில்தாயுடன் சேர்ந்து முறுக்கு வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
எதிர்காலத்தில் டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் இந்த ஏழை மாணவன் இலட்சியம். தனது கல்வியைத் தொடரமற்றவர்களின் உதவி கிடைத்தால் அதை ஏற்க தயாராக உள்ளார் ராமச்சந்திரன்.
* உன்னை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுக் காட்டுகிறேன் என்று அக்காவிடம் சவால் விட்டு அதை சாதித்துஅக்காவிடமிருந்து ரூ. 1,000 பந்தயப் பணத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார் நாகர்கோவில் மாணவி.
நாகர்கோவில் லிட்டில் பிளவர் பள்ளி மாணவி பிரவீணா குரு சாந்தி. இவர் 492 மதிப்பெண்களுடன்மாநிலத்திலேயே 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது கதை கொஞ்சம் வித்தியாசமானது. இவரது அக்காபிரியா வசந்தி பத்தாம் வகுப்புத் தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே 3வது இடத்தைப்பிடித்திருந்தார்.
உன்னை விட நான் அதிக மதிப்பெண்கள் பெற்றால் என்ன பந்தயம் என்று அக்காவிடம் பெட் கட்டினார்குருசாந்தி. அப்படி எடுத்தால் ரூ. 1,000 தருகிறேன் என்று அக்காவும் சவால் விட்டிருந்தார்.
சவாலை சீரியஸாக எடுத்து நன்றாகப் படித்த பிரவீணா குருசாந்தி அக்காவை விட அதிக மதிப்பெண்கள் எடுத்துசாதனை படைத்து, பந்தயத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
தனது அக்காவைப் போல டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்பதுதான் பிரவீணா குருசாந்தியின் லட்சியமாம்.
* மதுரை நிர்மலா மேல் நிலைப்பள்ளி மாணவி ஜனனி 2 மதிப்பெண்களில் மாநிலத்திலேயே முதலிடத்தைத் தவறவிட்டுள்ளார். இவரது வீட்டில் யாரும் அவ்வளவாக படித்ததில்லை. தந்தை பாலகிருஷ்ணன் பலசரக்குக் கடைவைத்துள்ளார்.
பத்தாவது வகுப்புத் தேர்வில் சென்னை வழக்கம் போல பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை,நாகர்கோவில், மதுரை, திருச்சி ஆகிய மாவட்ட மாணவ, மாணவிகள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்று அதிகஅளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அளவிலான ரேங்கிலும் இவர்களே முதலிடத்தில் உள்ளனர்.
அதே போல சாதாரண பள்ளிகளில் படித்த, வறுமை சூழ்ந்த குடும்பப் பின்னணி கொண்ட மாணவ, மாணவிகளின்தேர்ச்சி விகிதம் பிரபலமான பள்ளி மாணவ, மாணவிகளை விட அதிகமாகவே உள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications