நான்கு நாள் போலீஸ் காவலில் சுப. இளவரசன்
சேலம்:
வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படை தலைவர் சுப.இளவரசனும், அவரது கூட்டாளி சகாதேவனும் சேலம் மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார்.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அடிப்பாலாறு வனப் பகுதியில் சுப. இளவரசனும், சகாதேவனும்புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். இருவரும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் சேலம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மிகுந்தபாதுகாப்புடன் இளவரசன் சேலம் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் வந்த வேனை புகைப்படம் எடுக்கக்கூட பத்திரிக்கையாளர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இருவரையும் தங்களது காவலில் வைத்து விசாரிக்க கொளத்தூர் போலீஸார், மேட்டூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இதை ஏற்ற நீதிபதி ஹரிதாஸ் 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இளவரசனுடன் பிடிபட்ட சகாதேவன் மீது இதுவரை வழக்கு ஏதும் இல்லை, இவர் ஒரு அரவாணி என்றும்கூறப்படுகிறது.
முதலில் இளவரசனை திம்மம் துணை ஜெயிலில் அடைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காடடுப் பகுதியைஒட்டிய இந்த ஜெயலில் அவரை அடைப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் சேலம் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
"வீரப்பன் விரைவில் பிடிபடுவான்"
இந் நிலையில், வீரப்பனுக்கு ஆயுதங்கள், உணவு கிடைக்க உறுதுணையாக இருந்து வந்த சுப. இளவரசன்பிடிபட்டுள்ளதால் விரைவில் வீரப்பனும் பிடிபடுவான் என்று அதிரடிப்படை கூறுகிறது.
சுப.இளவரசன் பிடிபட்டுள்ளது வீரப்பனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக அதிரடிப்படை கருதுகிறது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications