மனைவி, மகளை எரித்து கொன்று கணவனும் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே அயப்பாக்கம் பகுதியில் மனைவி, மகளை எரித்துக் கொன்ற கணவன் தானும்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அம்பத்தூர் அருகே உள்ளது அயப்பாக்கம். இங்குள்ள தாமரை தெருவில் வெங்கடேசன்என்பவர் வசித்து வந்தார். இவரது முதல் மனைவி வளர்மதி. இவர் மாமியார் கொடுமைதாங்காமல் கடந்த 2002ம் ஆண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

முதல் மனைவி மூலம் வெங்கடசேனுக்கு செளம்யா (வயது 11), தனுசுயா (வயது 9), யுவனேஷ்(7) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சரஸ்வதிஎன்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வெங்கடேசன்.

வெங்கடேசன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அவரது தாயார் எதிர்த்து வந்தார். இந்நிலையில் இந்த விஷயம் தொடர்பாக வெங்கடேசனுக்கும், அவரது தாயாருக்கும் இடையேபிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த வெங்கடேசன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தார். தாயார் வீட்டுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வெங்கடேசன், தனது மகள்கள் மூன்றுபேர் மீதும் மண்ணெண்ணையை ஊற்றினார். பயந்து போன குழந்தைகள் அழ ஆரம்பித்துள்ளன.

செளம்யாவும், யுவனேஷும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அருகில் இருந்தவர்களிடம்தங்களைத் தந்தை கொல்லப் பார்ப்பதாக அழுதபடி தெரிவித்தன. அதிர்ந்து போன அக்கம்பக்கத்தினர் வெங்கடேசன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனைவி சரஸ்வதி, குழந்தை தனுசுயாஆகியோரோடு நெருப்பில் எரிந்து கொண்டிருந்தார் வெங்கடேசன்.

உடனடியாக அவர்களை அங்கிருந்து மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு மூன்று பேரும் அடுத்தடுத்து பலியாயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+